Verse 435
தொட்டுமிகக் காட்டுவது அந்தரங்கத் தோடு
குறிபோல காட்டுவது சூக்ஷா சூக்ஷம்
கட்டுவது அங்கையடா இருகால் தொட்டு
காரணத்தால் தொட்ட இடம் கருணையாகும்
எட்டும் ரண்டுங் கூடியல்லோ திறவு கோலாய்
இதையறிந்து பூரணத்தால் அதிர்ந்து பார்க்க
கிட்டுமடா பூரணத்தின் வட்டம் பாரு
கேசரத்தின் கேசரியின் கிருபை பாரே
Translation:
That which is
shown by touching, that which is shown
As a personal
sign is subtlest of subtle
That which is
tied is the beautiful hand, touching both legs
The place
touched by the causality is mercy
With the eight
and two coming together, as the key,
Knowing this
and seeing with shock, by the poornam
It will be
attained. See the circle of poornam
See the mercy
of kechari of kecharam.
Commentary:
Siddhas use
the three expressions, “vitta ezhutthu, vidaadha ezhutthu and thotta ezhutthu”. These correspond to the letters uttered where
the air is let in or inhibited. Thus,
vitta ezhutthu is akara where the air is allowed to come inside, vidaadha
ezhutthu is makaara uttered by closing the mouth and not letting the air in and
thotta ezhutthu is ukara where the air touches the mouth when uttered. Thus, “thuttukkaattu” in this expression
means ukaara.
Agatthiyar
says that it is the subtle of the subtle.
The subtle is Sivam, akaara. The
subtle of subtle is ukaara. The ukaara
shows the nature of akaara as the supreme subtlety. Thus “angai” is “am” or akaara. “iru kaal” or
two legs are inhalation and exhalation. “kaaranam”
and “pooranam” means sivam and sakthi.
Thus, the supreme locus is reached by the mercy of the kaaranam or
Supreme consciousness. The key to
attaining this state is “eight and two” or akaara and ukaara. These two letters represent the numbers eight
and two, in Tamil scipt. This state is
reached by being shaken by Sakthi.
Agatthiyar calls this as “quaken by the poornam” The circle of poornam refers to the supreme
state. This is the mercy of sakthi,
Kechari of the kecharam
You can find
information on kechari vidya at https://kaulabhairav.wordpress.com/2013/07/04/khechari-samadhi/,
http://yogendranathyogi.blogspot.in/2010/12/khechari-vidya.html
சித்தர்கள் விட்ட எழுத்து, விடாத எழுத்து தொட்ட எழுத்து
என்ற மூன்றைக் கூறுகின்றனர். இவற்றில்
விட்ட எழுத்து என்பது காற்றை உள்ளே அனுமதிக்கும் அகாரம் ஆகும். அ என்று கூறும்போது வாயைத் திறப்பதனால் காற்று
உள்ளே விடப்படுகிறது. விடாத எழுத்து
என்பது மகாரம் அல்லது ம் என்ற எழுத்து.
இது வாயை மூடியவண்ணம் உச்சரிக்கப்படுகிறது. தொட்ட எழுத்து என்பது உகாரமாகும். உ என்று கூறும்போது காற்று வாயைத்
தொட்டுக்கொண்டு வெளியே செல்கிறது. இவ்வாறு
விட்ட எழுத்து தொட்ட எழுத்து விடாத எழுத்து என்பவை அகார உகார மகாரன்களைக்
குறிக்கும். தொட்டு குறியாகக் காட்டு
என்று அகத்தியர் இங்கே கூறுவது உகாரத்தைக் குறிக்கும். அகார உகாரங்கள் காரணம் பூரணம் என்றும் அழைக்கப்படுகின்றன. உகாரம் அகாரத்தை சிவத்தை, அதன் செயல்பாட்டு
நிலையைக் குறிக்கிறது. இவ்வாறு இது
குறியாகிறது. இதை சூட்சத்தின் சூட்சம்
என்கிறார் அகத்தியர். இவ்வாறு தொட்டுக் காட்டுவது
அங்கை அல்லது அகாரம் இதை இருகால் எனப்படும் உள்மூச்சு வெளிமூச்சு என்ற இரண்டால்
காணலாம். இதைத் திறக்க உதவும் திறவுகோல் எட்டும்
இரண்டும் அதாவது அகார உகாரங்கள். இந்த
எழுத்துக்கள் தமிழ் எட்டு இரண்டு என்ற எண்களைக் குறிக்கின்றன. அதை பூரணத்தால் அதிர்ந்து காணவேண்டும். அப்போது பூரணத்தின் வட்டத்தைக் காணலாம். இதுவே கேசரத்தின் சக்தியான கேசரியின் கருணை
என்கிறார் அகத்தியர். கேசரி வித்யாவைப்
பற்றிய விவரங்களை மேற்கூறிய தளங்களில் காண்க.
No comments:
Post a Comment