Verse 411
பாரப்பா தன்னைமிக அறிவால்கண்டு
பாலகனே விந்துரச அமுர்தம் வாங்கி
நேரப்பா சற்குருவை தியானம் பண்ணி
நிலையறிந்து கணபதிக்கு அபிஷேகித்தால்
வீரப்பா கொண்டு நின்ற அறிவுமைந்தா
மெய்ஞ்ஞான பூரணமாய் விளங்கும் பாரு
காரப்பா அந்தநிலை சொந்த மென்று
கருணையுடன் அந்திசந்தி பூசை பண்ணே
Translation:
See son, seeing with awareness
Boy! Receiving the bindu amrita rasa
Contemplating on the sathguru
If you perform ablution to Ganapathy, knowing the state
The awareness, that is roaring, Son!
Will remain as meijnana poornam
Attain that state as belonging to you
Perform andhi sandhi puja, with mercy.
Commentary:
This verse talks about the amrit that is received through
vaasi yoga. The amrit that decends from
lalata or dvadasantha is usually lost to the surya mandala. To prevent this, it is collected at the
vishuddhi and brought down to muladhara.
Agatthiyar is referring to this process here. The bindu amrita rasa is the nectar. It is brought down to muladhara- ablution
performed to Ganapathy means this, Then the awareness or conscisouness will
remain as meijnana poornam. The
consciousness will not be limited but all pervading. This is the natural state of the soul. Knowing this the yogin has to raise his consciousness
through muladhara and the intermediate cakras- the andhi, terminus and sandhi,
the points of meeting.
லலாடம் அல்லது துவாதசாந்தத்திலிருந்து ஊறும் அமிர்தத்தை
எவ்வாறு உடலுக்குள் இறக்குவது என்பதை இப்பாடல் கூறுகிறது. மேலிருந்து கீழிறங்கும் அமிர்தம் பொதுவாக
சூரியமண்டலத்தினால் சுவீகரிக்கப்பட்டு வீணாகிவிடுகிறது. அவ்வாறு வீணாகாமல் இருக்க அதை விசுத்தியில்
சேகரித்து பின் மூலாதாரத்துக்கு இறக்கவேண்டும்.
இதையே அகத்தியர் கணபதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவ்வாறு செய்தால், அமிர்தம் மூலாதாரத்துக்கு
வந்தால் ஒருவரது உணர்வு அல்லது அறிவு, மெய்ஞ்ஞான பூரணமாகும் என்றும் இதுவே ஒருவரது
இயற்கையான நிலை என்றும் அகத்தியர் கூறுகிறார்.
இந்த நிலையை அறிந்து ஒருவர் அறிவை அந்தி எனப்படும் மூலாதாரத்திலும் சந்தி
எனப்படும் பிற சக்கரங்களின் ஊடும் எழுப்பவேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.
No comments:
Post a Comment