Monday, 27 June 2016

434. Saagaram

Verse 434
காணுதற்கு என்ன சொல்வேன் விதிதான் வேணும்
கண்டவர்கள் விண்டதுண்டோ கனியின் மார்க்கம்
பூணுதற்கு மனம் பூண்டு காலைப் பார்க்க
புலம்பி மனம் நிலையாதே மூலம் பார்க்க
தோணுதற்கு மும்மலமும் கண்டு போகுஞ்
சுகமாக சாகரத்தை அறிந்துகொள்வாய்
பேணுதற்கு ஏக வெளி சூக்ஷாசூக்ஷம்
புரிந்துகொள்வதற்குத் தொட்டுக் காட்டே

Translation:
To see, what shall I say, one should have fate
Has anyone who saw it explained it?
To adorn it, adorn the mind and see the breath
The mind will not abide (otherwise).  To see the muladhara
For it to appear, the triple faults will go away
You will comfortably know the sagaram
The singular space- to nurture, subtle of the subtle
Touch it and show- to understand.

Commentary:
Agatthiyar says that even though one puts in the effort fate should cooperate for it to become fruitful and those who experienced this state will not attempt to verbalize it as it is beyond any description.  This experience will occur when the mind abides.  Quietitude is not the natural state of the mind.  To bring the mind under control one should watch the breath.  Then all the faults will go away and muladhara will become perceptible.  Agatthiyar says that then one will know the sagaram.  Thus, this verse explains the name of this composition. Saumya sagaram  means ocean of wellness.  It is pool of nectar, the lalata cakra. This experience will reveal the singular space. 


யோகத்தின் உச்ச நிலையை அடைய ஒருவர் முயற்சிசெய்தால் மட்டும் போதாது, அதற்கு விதியும் ஒத்துழைக்க வேண்டும்.  அவ்வாறு உச்ச நிலையைக் கண்டவர்கள் அதை வார்த்தைகளால் விளக்க முனைய மாட்டார்கள் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அந்த நிலை வார்த்தைக்கு அப்பாற்பட்டது.  இந்த அனுபவம் ஏற்பட ஒருவர் தனது மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.  அது இயற்கையாக ஏற்படாது.  மூச்சைக் கவனிப்பது மனத்தின் ஓட்டத்தை நிறுத்த ஒரு வெற்றிதரும் வழியாகும்.   இவ்வாறு செய்தால் ஒருவர் சாகரத்தை அறிவார் என்று அகத்தியர் கூறுகிறார். இவ்வாறு அவர் இந்த நூலின் பெயரை விளக்குகிறார். இதனால் சாகரம் என்றால் லலாடம், அமிர்த கற்பம் என்பது தெரிகிறது.  சௌமியம் என்றால் நன்மையை பயப்பது என்று பொருள்.  நன்மையைப் பயக்கும் கடல் அமிர்த்த கற்பம்.  இந்த அனுபவம் ஏகமான வெளியைக் காட்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment