Verse 424
சத்தியுப்பு தயிலம்
சேரப்பா அஞ்சையுமே ஒன்றாய்ச் சேர்த்து
திறமாக மத்தித்து ரவியில் போடு
சாரப்பா இன்னமொரு கருமானாங் கேள்
சத்தியுப்பு தன்னுடனே வீரம்பூரம்
காரப்பா கருவறிந்து சேர்த்துக் கொண்டு
கவசமத்தில் தானமுழ்த்தித் தயிலம் வாங்கி
நேரப்பா முன்சொன்ன அஞ்சும் போடே
நிசமான தயிலமதை விட்டுக் கிண்டே
Translation:
The oil of
salt of Sakthi (sakthi uppu)
Assemble all
the five together
Center it and
place it in ravi
Listen to
another preparation
Along with
sakthi salt add veeram and pooram
Adding them
knowing the composition
Immersing in
the armour and extract the medicinal oil
Add the
previously mentioned five
Stir it adding
the true medicinal oil.
Commentary:
The
philosophical explanation: the five from
previous verse- sakthi, siva, vaalai, poornam and ravi bhijam. They are nadha, bindhu, kundalini which is a
combination of breath, prana, mind and consciousness, and akara.
The sakthi uppu
is ukara. Veeram and pooram (verse 319)
was the prapancha prana or the space principle. They are immersed in the armour
which may be the body or the sushumna nadi.
The oil is the fluid in the body.
To this is added the above five and stirred with the medicinal
Agatthiyar is
indicating seed letters or bhija akshara that are recited during this
process. These mantra should be obtained
from a guru. Hence, he has not mentioned
them explicitly.
இப்பாடலுக்குத் தத்துவ விளக்கம்: ஐந்து என்றது சிவ சத்திவாலை, பூர்ணம் மற்றும் ரவி
பீஜம். சிவ சக்தி வாலை என்பவை நாதம், பிந்து, குண்டலினி அல்லது சிகாரம் என்பதை
முன்னே பார்த்தோம். சக்தி உப்பு என்பது உகாரம், வீரம் பூரம் என்பது பிரபஞ்ச சக்தி
என்று முன்பு அகத்தியர் கூறினார். இவை
இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அதிலிருந்து வரும் தைலத்தில் மேற்கூறிய ஐந்தையும்
சேர்த்து கிண்ட வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இங்கு கூறப்பட்டுள்ளவை மந்திர உச்சரிப்புடன் பிராணன்,
பிரபஞ்ச சக்தி, நாதம், பிந்து, உணர்வு மற்றும் மனம் ஆகியவற்றைக் கொண்டு
செய்யப்படும் குண்டலினி யோகத்தின் வழி முறைகள்.
இவற்றை ஒருவர் குருமுகமாகப் பெற வேண்டும் என்பதனால் அவற்றை வெளிப்படையாகக் கூறாமல்
குறிப்பாகக் கொடுக்கிறார்.
No comments:
Post a Comment