Verse 423
பூரண மெழுகு
வாங்கி வந்த பூரணத்தை மைந்தா நீயும்
வணக்கமுடன் பீங்கானில் வைத்துப் போற்றி
பாங்குபெற ரவி பீசஞ் சரியாய்ச் சேர்த்து
பதமாக மத்தித்து ரவியில் வைத்து
சாங்கமாய்க் காய்ந்த பின்பு எடுத்துப் பாரு
சதாசிவத்தின் செயலதனால் மெழுகாய்ப் போகும்
பூங்கமல அமுர்தரச மெழுகை வாங்கி
புத்தியுடன் சத்திசிவ வாலைசேரே
Translation:
Wax of poornam
(poorana mezhugu)
The poornam
that you received, son,
Placing it in
the ceramic, with humility and praise
Adding the
ravi bheejam correctly
Centering it
properly, placing it in ravi
After it has
dried, look at it
It will become
a wax due to Sadasivam’s action
Receiving the amrita
rasa wax of the lotus flower,
Add Sakthi,
Siva and vaalai to it.
Commentary:
Even though
this verse sounds like a medicinal preparation it is also a hint for kundalini
yoga. We have to remember that Siddha songs are
applicable in all the three levels, physical, mental and spiritual. For details about steps in vaasi/siva yogam
please refer to Dr. T. Sumanendran’s book Agatthiyar yoga jnana thiravukol.
Poornam is
supreme consciousness. It is received due to Sakthi’s grace. It is the amrita rasa or the divine nectar
that flows down from the dvadasantha, the anda kechari. This is then collected at the vishudhi the
ceramic. Vishuddhi cakra is called a
lake. The nectar is collected here and slowly exposed to the surya mandala, the
region that spans the throat to the navel region. The bhijam referred to here is specific
mantra. It may also be ukara. The akara corresponds to agni mandala, ukara
the surya mandala and Makara the chandra mandala. The nectar is dried due to
the action of the ajna cakra, by Sadasivam who resides there. The nectar hardens. To this added the sakti, siva and
vaalai. Sakthi corresponds to nadha,
Siva to bindu and Vaalai to the combination consisting of prana and its vehicle
the breath, the mind and consciousness.
வைத்தியத் தயாரிப்பைப் போலத் தோன்றும் இப்பாடல் ஆன்மீக விளக்கமும்
ஆகும். சித்தர் பாடல்கள் தூலப்பொருட்கள்
நிலை, மனோ நிலை, ஆத்மநிலை என்ற மூன்று நிலைகளிலும் பொருள் தருவன என்பதை நாம் நினைவில்
கொள்ளவேண்டும். வாசி யோகம்/சிவ யோகம் பற்றிய
குறிப்புக்களுக்கு முனைவர் த. சுமநேந்திரன் அவர்களது அகத்தியர் யோக ஞானத்
திறவுகோல் என்ற புத்தகத்தைப் படிக்கவும்.
பூரணம் என்று இங்கு குறிப்பிடப்படுவது பிரபஞ்சப் பிராணன்
அல்லது பரவுணர்வு. இதுவே அமிர்த ரசமாக
அண்டகேசரி எனப்படும் துவாதசாந்தத்திலிருந்து கீழே இறங்குகிறது. இதை விசுத்தி சக்கரத்தில்
சேமிக்கவேண்டும். இல்லாவிட்டால் சூரிய
மண்டலத்தில் விழுந்து அது வீணாகிவிடுகிறது.
இவ்வாறு விசுத்திக்கு இறங்கும் அமிர்த ரசத்தை மந்திரங்களுடன் மெதுவாக
மூலாதாரத்துக்கு இறக்கவேண்டும். விசுத்திக்கு
இறக்கிய அமிர்தத்தை ரவி பீஜத்துடன் சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர். இங்கு ரவி எனப்படுவது சூரிய மண்டலமாகும். அதற்கான பீஜமந்திரத்தை இங்கே அகத்தியர்
குறிப்பிடுகிறார். இந்த பீஜம் உகாரமாகவும்
இருக்கலாம். அகாரம் அக்னி மண்டலத்துக்கும் உகாரம் சூரிய மண்டத்துக்கும் மகாரம்
சந்திரமண்டலத்துக்கும் உரியவை. இவ்வாறு
இறக்கிய அமிர்தம் மத்திக்கப்பட்டு அல்லது மத்தியில் உள்ள சுழுமுனை நாடியில்
சேர்க்கப்பட்டு ரவியினால் இறுகுகிறது. இது
சதாசிவத்தின் அருளால் நிகழ்கிறது என்கிறார் அகத்தியர். இவ்வாறு மெழுகுபோல் இறுகிய அமிர்தத்துடன்
சக்தி, சிவன், வாலையை சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர். மேலிருந்து கீழே இறங்கும் பிரபஞ்ச பிராணனுடன்
உடலில் உள்ள பிராணன், மனம் மற்றும் உணர்வைச் சேர்க்கவேண்டும் என்று இதற்குப்
பொருள்.
No comments:
Post a Comment