Verse 436
பாரடா பரஞ்சோதி முக்கோணத்தில்
பத்திகொண்டு இன்னமொரு கருவைக் கேளு
கூறடா கனிந்து உனது அறிவால் நீயும்
காலறிந்து வாசியினால் கருவைப் பற்றி
ஆரடா நிலையறிந்து பானங் கொள்ளு
நிலையான அறுசபையும் நிலைதப்பாது
பேரடா அடிமூலங் கணேசன் இச்சை
மெய்ஞ்ஞான பூரணத்தின் கெதியைப் பாரே
Translation:
See the
supreme effulgence at the triangle
Hear about
another essence, with devotion.
Knowing the
air, through vaasi, holding it
Know the state
and consume the drink
The loci, the
six sabha will not lose their status/state
The bottom
terminus- the iccha Ganesha
See the path
of the meijnana poornam.
Commentary:
The triangle mentioned in the first line refers to the
ajna cakra. Agatthiyar talks about another practice. The yogi becomes aware of how the breath
flows, the essence is known with the help of vaasi and the nectar is
consumed. The six sabha or the cakra
will emerge and the ganesha and iccha sakthi or buddhi will emerge at the
muladhara. The path of the meijnana
poornam or supreme consciousness will become known.
இங்கு முக்கோணம்
எனப்படுவது ஆக்ஞா சக்கரமாகும். அங்கு ஒளி
தென்படுகிறது. மற்றொரு வழியை அகத்தியர்
இப்பாடலில் கூறுகிறார். அறிவினால் சரம் எனப்படும் மூச்சு எவ்வாறு ஓடுகிறது என்பதை
அறிந்து வாசியினால் கருவைப் பற்றி அமிர்தத்தைப் பருகவேண்டும். அப்போது ஆறு சபை எனப்படும் சக்கரங்கள் தென்பட
ஆரம்பிக்கின்றன. அடிமூலம் எனப்படும்
மூலாதாரத்தில் கணபதியும் இச்சை எனப்படும் புத்தியும் தென்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மெய்ஞ்ஞான பூரணம் எனப்படும்
பரவுணர்வு தனது கதியில் பயணிக்கத் தொடங்குகிறது.
இதைப் பார் என்று புலத்தியரிடம் கூறுகிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment