Sunday, 24 July 2016

453. Mei tavam

Verse 453
எண்ணுவதும் உண்ணுவது மந்திர சூட்சம்
ஏகாந்த சூட்சத்தை என்ன சொல்வேன்
விண் நிறைந்த சூட்சமடா அம்மாவாசி
வேதாந்த வாசிசிவ விந்துநாதம்
கண் நிறைந்த போதமடா கமலபோதம்
கருணைவளர் பூரணமாய் நின்ற நாதம்
உன்னி விளையாடுகின்ற நாதந்தன்னை
உத்தமனே மெய்த்தவமாய்க் கண்டு பாரே

Translation:
Thoughts and food are mantra sookshma
How will I describe the ekantha sookshma
The subtlety that fills the sky the ammaavaasi (the great vaasi, the new moon)
Vedanta vaasi, Siva bindu nadham
The bodham that filled the eyes, the bodham of lotus
The nadha that remained as the merciful poornam
The nadha that looks pointedly and plays
The Supreme One! See it as true tapas/ the tapas of the body.

Commentary:
The word mantra, when split as man+tra has the following etymological meaning.  man- manas, tra- instrument.  It is that which uses mind as the instrument.  The mind’s movement is closely linked with the breath.  Through breath regulation the mind is brought under control.  Hence, Agatthiyar is saying that the mantra sukshma is the great vaasi or regulated breath. Am-maa-vaasi means that great regulated breath/prana.  This is the Vedanta vaasi.  It is the Siva bindu nadha that dances as the merciful poornam.  Agatthiyar calls this as mei tapas.  Mei means truth.  It also means body.  Mei tavam is thus the tapas done with the body to use the mind as the instrument to attain the supreme state.


மந்த்ரா என்ற சொல் மன்+த்ரா என்று பிரிந்து மனத்தைக் கருவியாகக் கொண்டது என்று பொருள்படுகிறது.  மந்திர சூட்சுமம் என்பது மனத்தின் சூட்சும நிலை என்று கொண்டால் அந்த நிலையை அடைவது வாசி எனப்படும் மூச்சு பிராணன் கலவையினால் ஏற்படுகிறது.  இவ்வாறு உடலின் மூலம் மனம் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.  அதை அகத்தியர் சிவபிந்து நாதம் என்கிறார்.  இந்த நாதம் உன்னி நடனமாடுகிறது என்னும் அகத்தியர் அதை மெய்த்தவமாகப் பார்க்கவேண்டும் என்கிறார்.  மெய்த்தவம் என்பது உண்மைத் தவம் என்றும் மெய் என்னும் உடலால் செய்யப்படும் தவம் என்றும் பொருள்படும்.  

No comments:

Post a Comment