Verse
460
காணுகின்ற சுழிதனிலே சுழலாமல்தான்
கருவான காயாஸ்திரி விஞ்சை கேளு
ஊணுகின்ற விஞ்சையடா மவுன ஞானம்
உண்மையென்ற ஞானமடா மந்திரவாலை
தோணுகின்ற வாலையடா மந்திர ரூபி
சுயஞ் சோதியான ஜெக ஜோதிதன்னை
பூணுகின்ற சித்தமதாய் தானே நின்று
பூரணமாய்க் கேசரியைப் பூசைபண்ணே
Translation:
Without
spinning in the whorl
Listen
about the subtlety of kayasthri
Firmly
planting subtlety is the wisdom of silence
The
truthful jnana is mantra vaalai
The
vaalai who occurs is mantra rupi
The
self effulgent jyothi,
Remaining
as the chittam that adorns it
Perform
the puja of kechari as fully complete.
Commentary:
Agatthiyar
explains how to escape from spinning in the whorl of samsara or the ajna
instead of going beyond. He says that
the secrete or subtlety of kayasthri or Gayathri is the mouna jnana or wisdom
of silence. This is the true jnana, the
mantra vaalai. Her form is mantra. The yogin should have his chittham merged in
this form, the mantra, the self effulgent jyothi and perform kechari puja. That is, the yogin should focus his chittham
in the mantra, remaining in this state he should eulogize Kechari, the purna.
சம்சார சுழலில் சிக்கிக்கொள்ளாமல் அல்லது
ஆக்ஞையில் நின்றுவிட்டு மேலே செல்லாமல் திண்டாடுவதைத் தவிர்க்க வழியை சொல்லுகிறார்
அகத்தியர். காயாஸ்திரியின் விஞ்சை மவுன
ஞானம் என்றும் அதுவே உண்மை ஞானம், அதுவே மந்திர வாலை என்றும் அவளது உருவம்
மந்திரம் என்றும் கூறும் அகத்தியர் இந்த உருவை, சுயம்பிரகாசமான சோதி நிலையை
சித்தத்தில் கொண்டு ஒருவர் கேசரியை பூரணமாகப் பூசை செய்ய வேண்டும் என்று
கூறுகிறார்.
No comments:
Post a Comment