Verse 452
உண்டாகும் ஓம் றீங் மசிமசி என்றோத
ஒடுங்காத காலகடி விஷங்கள் மீளுந்
தாண்டாமல் ஓம் றீங் அங்கென்றோத
தட்டழிந்து மிருகமெல்லாந் தானே ஓடும்
நன்றாகச் சொன்னதிந்த மந்திர வாளை
நாட்டமுடன் பூரணமாய் பூசைபண்ணி
நின்றாட யாதொருகால் எழுத்துக்கெல்லாம்
நிசமான மந்திரவாள் ஓம்றீங் என்னே
Translation:
Reciting om
reeng masi masi
All the
poisons, insect bites will be relieved
Reciting om
reeng ang
All the
animals will run away
This magical
sword was described well
Worshiping it
as poornam, with interest,
The air will
remain dancing in one place. For all the
letters
The true
magical sword is om reeng.
Commentary:
Agatthiyar
says that when om reeng is combines with masimasi it will provide relief for
insect bites, poisons. When it is
uttered as om reeng ang all the animals will run away without harming the
person. When these letter, om reeng is
recited considering it as poornam or fully complete then the vital air will
remain in kumbakam. Thus, according to
Agatthiyar om reeng is the magical sword for all the bhija akshara or letters.
ஓம் றீங் என்ற எழுத்துடன் மசிமசி என்று ஓத எல்லாவிதமான
கடிகளும் விஷங்களும் விலகும். ஓம் றீங்
அங் என்று ஓத எல்லா தீய விலங்குகளும் விலகி ஓடிவிடும் என்று கூறும் அகத்தியர் ஓம்
றீங் என்ற எழுத்துக்களை பூரணமாகக் கருதி பூசித்தால் கால் எனப்படும் பிராணன் நின்று
ஆடும், அதாவது, கும்பகத்தில் நிற்கும் என்கிறார்.
இவ்வாறு எல்லா எழுத்துக்களுக்கும் ஓம் றீங் என்பது மந்திரவாளாகச்
செயல்படுகிறது என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment