Verse 450
மந்திரத் தியானம்
பாராளும் புலத்தியனே சகலருக்கும்
பதிவான மந்திரவாள் சூட்சங்கேளு
நேரான மூலமடா வடிவுமாச்சு
நிசமான றீங்காரம் வேலுமாச்சு
கூறாத வடிவெல்லாம் மந்திர வாளை
கூரிமையுடன் சொல்லுகிறேன் ஓம்றீங் என்று
மாறாத மவுனமதாய் தியானம் பண்ண
மார்க்கமுடன் தியான வகையைப் பற்றே
Translation:
Mantra dhyana
Pulathiya who rules the world! For all the citizens of
the world
Listen to the subtlety of the magical sword
Its form is that of the origin,
The truthful reeng became the spear
All the forms of the magical sword that were never
described
I will tell you as om hreeng
Performing dhyana silently/as silence
Hold on to the types of dhyana in the proper way.
Commentary:
In this verse Agatthiyar mentions the mantra he was
referring to all along. It is om
reeng. He says that the magical sword is
the origin or mula. The tail or the stem
of it, the Vel is reeng. Thus, the head
is omkara and it is directed to the target by the mantra reeng. In Tamil it is not
possible to distinguish between reeng and hreeng. So, the Siddhas give the hreeng as that with
the big r.
We will understand the reason behind this as
follows. Hreeng or hreem is called
Bhuvaneswari pranava or Sakti bhijam like om which is Siva bhija mantra. The ha is akshara for Siva. Hra where it is joined with ra and emerging
as a half of ha and ra, as hr shows the creative power of prakriti. Thus a remains hidden here. ee means Siva and
prakriti joined together and set into action as Sakti or Mahamaya. The bindu pronounced as m denotes laya, back
into Siva. Thus hreem represents creation and dissolution of the Divine.
Hreem is an important mantra is SriVidya. Three sections of the panchadasi or 15 letter
mantra of SriVidya are separated by hreem indicating the various aspects of the
Devi. In Lalitha Sahasranama there are
60 sacred names for Devi that begin with Hreem. Using hreem mantra the yogin
wakes up his muladhara cakra. The upasana using this mantra is called vachaka
upasana. Also Ha is the iccha sakti, ra
the kriya sakti and ee the jnana sakti of the Divine.
Agatthiyar incates this by saying that om is the form and
hreeng is the spear of the mantra, the active aspect of the omkara.
இதுவரை தான் கூறிய மந்திரம் எது என்று அகத்தியர் இப்பாடலில்
குறிப்பிடுகிறார். அந்த மந்திரம் ஓம் றீங்
என்பது. இதுவே மூலமான மந்திர வாள்
என்கிறார் அவர். இந்த மந்திரத்தின் உருவு
ஓம் என்றும் றீங் அதன் வேல் என்றும் அவர் விளக்குகிறார். அதாவது ஓங்காரத்தை றீங்காரம் செயல்பட வைக்கிறது
என்கிறார் அவர். இதைப்பற்றி மேலும் சில
விவரங்களைப் பார்ப்போம்.
தமிழில் றீங் என்பதற்கும் ஹ்றீங் என்பதற்கும் வித்தியாசம்
காட்ட முடியாது. அதனால் சித்தர்கள் ரீங் என்று இதைக் குறிப்பிடாமல் றீங் என்று
குறிப்பிடுகின்றனர். ஹ்ரீங் அல்லது ஹ்றீம்
என்பது புவனேஸ்வரி பீஜம் அல்லது சக்தி பிரணவம் எனப்படுகிறது. ஓம்காரம் சிவ பீஜம் அல்லது சிவ
பிரணவமாகும். இது தந்திர பிரணவம், வேத
பிரணவமல்ல. ஹ்றீங் என்ற மந்திரத்தில் ஹ
என்பது சிவனைக் குறிக்கும் அது ற வின் பாதியுடன் சேர்ந்து ஹ்ற் என்றாகும்போது
பிரகிருத்தியின் படைப்புச் சக்தியைக் காட்டுகிறது. இந்த பாதி எழுத்து ஈ என்னும் சப்தத்துடன்
சேரும்போது உச்சரிக்கத் தகுந்ததாக, செயல் பாடுடையதாக, சக்தியினால்
வழிநடத்தப்படுவதாக மாறுகிறது, ம் என்பது
சப்தம் அல்லது பிந்து இவ்வாறு தோற்றமளிக்கும் சக்தி சிவன் பிரகிருதிகள் லயமடைவதைக்
குறிக்கிறது.
ஸ்ரீவித்யாவில் ஹ்றீம் என்ற மந்திரம் மிக
முக்கியமானது. லலிதா சகஸ்ரநாமத்தில்
அறுபது பெயர்கள் இந்த மந்திரத்துடன் தொடங்குகின்றன. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஒருவர்
தனது மூலாதாரத்தை எழுப்புகிறார். இது வாசக
உபாசனை எனப்படுகிறது. இந்த மந்திரத்தில் ஹ
என்பது இச்சா சக்தியையும் ற என்பது க்ரியா சக்தியையும் ஈ என்பது ஞான சக்தியையும்
குறிக்கின்றன என்று அதர்வண வேதம் கூறுகிறது.
ஒவ்வாரு ஓம் என்னும் சிவனை ஹ்றீங் என்ற சக்தி வேலாக இருந்து வழிநடத்துகிறாள் அதுவே மந்திர
வாள் என்று அகத்தியர் கூறுகிறார்.
சித்தர்கள் சில இடங்களில் றீயும் என்று எழுதுகின்றனர்..அதனுடைய சரியான உச்சரிப்பு என்ன சார்
ReplyDeleteமந்திரங்களை ஒரு குருவிடமிருந்தே கற்றுக்கொள்ளவும். இடத்துக்கேற்றபடி அவற்றின் உச்சரிப்பு மாறும்.
ReplyDeleteஉதாரணமாக அங் என்பது பிரபஞ்ச சக்தியை உள்ளிழுக்கிறது, அம் என்பது அதை உள்ளே நிறுத்துகிறது