Monday, 25 July 2016

454. om reeng sivayavasi

Verse 454
பாரப்பா இடதுகண் அகாரஞ்சந்திரன்
பதிவான வலதுகண் உகாரஞ்சூரியன்
நேரப்பா சுழிமுனைதான் மகாரம் அக்கினி
நினைவாக இப்படியே தியானஞ் செய்து
கூரப்பா செபிக்கிர தேவி மந்திரங்கேளு
கருணையுடன் ஓம் றீங் சிவயவசி என்று
தேரப்பா இப்படியே தியான செபம் பண்ண
சிவசிவா இகபரமும் முத்தியாச்சே

Translation:
See son, the left eye is akara, the moon
The right eye, ukara is sun
The sushumna, makara is fire
Performing dhyana with concentration in this fashion
Listen to the devi mantra that is chanted
It is om reeng sivayavasi, with mercy.
Performing dhyana in this fashion
Siva sivaa, it will become liberation in this world and the next.

Commentary:
In the previous verses Agatthiyar described the benefits of reciting the magical sword, the mantra om reeng in combination with other letters.  Here he is focusing on its efficacy in kundalini yoga.  He says that the Devi mantra that should be chanted is om reeng sivayavasi.  This should be chanted while contemplating on the image, the right eye being the ukara, the sun, the left eye being the akara the sun and the sushumna the fire, makara.  Agatthiyar says that if one performs dhyana in this fashion one will attain mukti.

Let us examine why Agatthiyar is prescribing this mantra for liberation.  The mantra sivayanama or panchakshara represents the five elements as follows: si-fire, va- air, ya- space, na- earth and ma-water.  Thus the mantra namasivaya represents kundalini moving from muladhara to ajna the loci of these seed letters.  So when this mantra is uttered as sivayavasi it means the water and earth principles are merged in the other three, fire, air and space.  With space as the center, the fire and air in the body- the kundalini and prana are made to harmonize with the prapancha prana and the mahakarana sareera who form is that of fire.  Thus, this mantra represents a state where the yogi is in continuous communication with the universe.  There is a continuous flow of universal energy through him.  Siddhas call this state as saagaakkaal or undying air where the prana flows continuously without any cessation, like a tornedo.  This is the supreme state that a yogi attempts to achieve.  The bija mantra om reeng helps him attain this state.

முந்தைய பாடல்களின் அகத்தியர் மந்திர வாள் எனப்படும் ஓம் றீங் என்ற மந்திரத்தை பிற பீஜாட்சரங்களுடன் சேர்த்து எவ்வாறு ஓதுவது என்றும் அதனால் ஏற்படும் பயனையும் கூறினார்.  இப்பாடலில் இந்த மந்திரத்தை குண்டலினி யோகத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறுகிறார். யோகத்தில் செபிக்கவேண்டிய தேவி மந்திரம் ஓம் றீங் சிவயவசி என்பது.  இந்த மந்திரத்தை ஒருவர் இடதுகண் அகாரம் சந்திரன், வலதுகண் உகாரம் சூரியன், சுழுமுனை மகாரம், அக்னி என்ற நினைப்புடன் தியானம் செய்து உச்சரித்தால் இகபர முக்தி கிட்டும் என்கிறார் அகத்தியர்.

எதனால் அகத்தியர் இந்த மந்திரம் முக்தியை அளிக்கும் என்று கூறுகிறார் என்று பார்ப்போம்.  நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் இந்த எழுத்துக்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன.  ந-பூமி, ம-நீர், சி-அக்னி, வ-காற்று, ய- ஆகாயம்.  இந்த மந்திரம் சிவயவசி என்று உச்சரிக்கப்படும்போது பூமி மற்றும் நீர் தத்துவங்கள் மற்ற மூன்று தத்துவங்களில் சேர்க்கப்பட்டு ஆகாயத்தை மையமாக வைத்து உடலில் உள்ள பிராணனும் குண்டலினி அக்னியும் பிரபஞ்ச பிராண சக்தியுடனும் அக்னி ரூபமான மகா காரண சரீரத்துடனும் சேர்ந்திசைந்திருக்கின்றன.  இந்த நிலையில் பிரபஞ்ச பிராணன் தொடர்ந்து அவரது உடலுள் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையை சாகாக்கால் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

இந்த உச்ச நிலையை அடைய ஓம்றீங் என்ற மந்திரம் உதவுகிறது.

3 comments: