Sunday, 10 July 2016

443. Puja of the pots

Verse 443
நாற்பத்து முக்கோணம்
கேளப்பா பிரணவமேல் முக்கோணமிட்டுக்
கிருபையுள்ள கோணமதில் விந்து போட்டு
வாளப்பா சொல்லுகிறேன் கும்பமெல்லாம்
வகையுடனே நூலணிந்து கெங்கைவிட்டு
ஆளப்பா மாங்குலையுந் தேங்காய் சாற்றி
அன்பாக அவர் தனித்து ஆடை சாற்றி
சூளப்பா சுகந்த பரி மளங்கள் சாற்றி
சுத்தமுடன் தானிருந்து பூசைபண்ணே

Translation:
Forty triangles
Listen Son, drawing a triangle over the pranava,
Drawing a bindhu in that angle
I will tell you.  Wrap all the kumba
With thread and add water (ganga) to it
Place mango leaves and coconut
Add their individual clothes as dress
Adorn them with fragrances
Remaining pure, perform puja.

Commentary:
This verse describes the puja of Srichakra.  Siddhas call the Srichakra as forty triangles.  Agatthiyar says that a triangle is drawn over the pranavam. A bindhu or dot is added to it.  The pots are wrapped with thread, water added to them and the usual custom of mango leaves and coconut are placed over them.  Each pot is wrapped in a cloth appropriate for a particular planet.  They are adorned with fragrances such as sandalwood paste and worship ritual is performed.

It is common to perform navagraha puja during several auspicious occasions such as house warming ceremony.  Let us see what the navagraha signify and why we eulogize them.  During the big bang the energy that was released during the process assembled into nine primary rays.  They rays are represented by the navagraha.  The word graha, besides meaning planet, also mean that which grabs.  These energy rays assemble, change, evolve and divide into various factors and affect the earth.  In the end, during dissolution, they go back and merge into the state of singularity.  Thus, worshipping the navagraha is worshipping the primary energy rays.  These rays represent various factors.  These factors are present in greater amounts in certain objects.  For example the ray or the principle represented by Sani is present in great amounts in sesame seeds.  Hence, sesame seeds are used for worshipping Sani.  Similarly, the color black represents the Sani principle more than other colors.  Hence, black cloth is offered as the vastram for Sani.
When Agatthiyar says adorn the respective dresses for the planets he means worship all the parts of the primal Sakthi through this ritual.

ஸ்ரீ சக்ர பூசைக்கான ஆயத்தங்களை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  சித்தர்கள் ஸ்ரீ சக்கரத்தை நாற்பது முக்கோணம் என்று அழைக்கின்றனர்.  பிரணவத்தைச் சுற்றி கோணங்களை வரைந்து நடுவில் பிந்துவைப் போடவேண்டும்.  அதன் மேல் நூல் சுற்றிய கலசங்களை வைத்து அதில் நீர் சேர்த்து அதன் மேல் வழக்கப்படி மாவிலை தேங்காயை வைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஒவ்வொரு கலசத்தைச் சுற்றியும் அந்தந்த கிரகத்துக்கான வஸ்திரத்தைச் சாற்ற வேண்டும்.  அதன் பிறகு அவற்றிற்கு சந்தனம் போன்ற வாசனை திரவியங்களைச் சாற்றி பூசை செய்ய வேண்டும் என்கிறார் அகத்தியர்.

கிரகப்பிரவேசம், நாமகரணம் போன்ற பல சடங்குகளின் பகுதியாக நவக்கிரக ஹோமம் அல்லது பூசை செய்வது வழக்கம்.  அதை நாம் ஏன் செய்கிறோம் என்பதை இங்கே சிறிது பார்ப்போம்.  உலகம் தோன்றும்போது ஆதி வெடிப்பு ஏற்பட்டது. அப்போது வெளிவந்த சக்தி ஒன்பது ஆதி கதிர்களாக வெளிவந்தன.  இந்த ஒன்பது கதிர்கள் ஒன்பது ஆதி வஸ்துக்களைக் குறித்தன.  இந்த கதிர்கள் ஒன்றோடொன்று சேர்வது, பரிணாம மாற்றமடைவது, பிரிவது என்று பல மாற்றங்களை அடைந்து உலகில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  இவ்வாறு நவக்கிரக பூசை என்பது ஆதியின் தோன்றிய சக்திகதிர்களின் வழிபாடாகிறது.  இந்த கதிர்கள் ஒவ்வொரு ஆதி தத்துவத்தையும் குறிக்கின்றன.  இந்த தத்துவங்கள் சில பொருள்களில் அதிகமாக வெளிப்படுகின்றன.  உதாரணமாக சனி குறிக்கும் தத்துவம் எள்ளிலும் கருப்பு நிறத்திலும் அதிகமாக வெளிப்படுகிறது.  அதனால் சனியை வழிபடும்போது, அது குறிக்கும் தத்துவத்தை வழிபடும்போது அந்த தத்துவம் அதிகமாக வெளிப்படும் எள்ளையும் கருப்பு வஸ்திரத்தையும் பூசையில் சேர்த்துக்கொள்கிறோம். 

இவ்வாறு நவகிரகங்களையும் அவற்றிற்கான வஸ்திரங்களுடன் வழிபட வேண்டும் என்று அகத்தியர் குறிப்பிடுவது ஒன்பது ஆதி சக்திகளை வழிபடுவதாகிறது.  இந்த சக்திகள் முடிவில் ஆதிசக்தியில் லயமடைகின்றன.

No comments:

Post a Comment