Sunday 28 August 2016

481. Maya, chendhura bhasma

Verse 481
பாரப்பா மாய்கை என்ன ஆசாபாசம்
பலபலவாம் சாஸ்திரத்தை பத்திஏறும்
நேரப்பா போதையிலே சென்று பாயும்
நேர்மையுடன் புருவமதில் நிலையில் நிற்கும்
காரப்பா காயாதி கற்பம் தேடும்
கர்ப்பமொன்று செந்தூர பற்பஞ்செய்யும்
வீரப்பா செந்தூரலோகம் பண்ணு
விசையான மாய்கைவிளை யாட்டு தானே

Translation:
See son, maya is desire and attachment
It will ascend holding on to several sastra
It will flow straight into enchantment
It will remain firmly at the eye brows
It will search for kayadhi karpam (the state, the origin of body)
The karpam will create red ash
The veeram will cause chendoora logam
All these are the play of maya, the force.

Commentary:
This verse explains Agatthiyar’s definition of maya.  It is not the evil force but one that helps the yogin reach the supreme state.  He says that the maya is desire and attachment.  This is the desire to go beyond the confines of time and space.  This process is facilitated by maya, the good force.  This force will search for the “amrita karpam” the dvadasantha.  This karpam will make the yogin reach the state which is the origin of the body, that is, manifestation.  This karpam will cause sendhooram. The word sendhoora logam is interesting.  Generally it is a chemical process of roasting products until they are red.  In Siddha medicine four types of sendhuram are considered important.  They are mruthyunjayam (the products are burnt till they are red), ayam sendhuram (they are cooked in heat until they are red), Chanda maarutha chendhuram (grinding the products and burning them) and ayamveera chendhuram (roasting products until they are red).
While the above look like medicinal preparation they also have a yogic equivalence.  During vasi yoga the fire of kundalini is kindled and the faults or mala are roasted with it. This is similar to ayam veera sendhuram.  In another work Agatthiyar explains veeram as vaasi.  This will make the vaasi or breath flow with great force.  This is the state of sakaakkaal or undying air.  This is similar to the Chanda maarutham.  Maarutham means air, Chanda maarutham means air flowing with great force.  This state makes the prapancha prana harmonize with the prana in the body.  This is not the end stage.  The yogin than deals with ahamkara or the feeling of ‘ayam’.  This is the state explained by the mahavakhya ‘ayam atma’.  This ahamkara or limitedness is removed by repeated contemplation which is the ‘pudam’.  This is the ayam chendhuram.  The next state is the deathless state or mruthyu jayam, victory over death.  Thus, everything in the Siddha marga has an obvious meaning and a hidden meaning.The sendhuram that Agatthiyar is talking about in this verse seems to be referring to the inner meaning.    

The maya, the force will follow the methodology listed in the sastra and ascend through the chakra.  It will reach the state of enchantment and remain firmly at the ajna.  It will seek the kayadhi karpam, the amrit from dvadasantha.  This karpam will roast the mala or innate impurities in the body, make them into chendhura parpam.  It will casue ayam veera chendhura logam.  Agatthiyar says that all these are the play of maya.

மாயை என்றால் என்ன என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார்.  மாயை என்பது தீய சக்தியல்ல அது நன்மை பயக்கும் விசை என்று கூறும் அவர் மாயை என்பது ஆசாபாசம் என்றும் கூறுகிறார். இந்த விசை காயாதி கற்பம் எனப்படும் உடலுக்கு முற்பட்ட நிலையை தேடும் என்றும் அது செந்தூர பற்பம் செய்யும் என்றும் கூறுகிறார்.
சித்த மார்க்கத்தில் செந்தூரம் ஒரு முக்கியமான மருந்தாகும்.  அது அக மருந்து எனப்படுகிறது.  மருத்துவப்பொருள்களை சிவக்கச் செய்வது செந்தூரம் எனப்படுகிறது.  ரசவாதத்தில் தாழ்ந்த உலோகங்களை தங்கமாக்க செந்தூரம் பயன்படுத்தப்படுகிறது.  செந்தூரத்தில் மிருத்யுஞ்சயம், அயம் செந்தூரம், சண்ட மாருத செந்தூரம் மற்றும் அயம் வீர செந்தூரம் என்ற நான்கு வகைகள் முக்கியமானவை.  பொருள்களை சிவக்க வறுப்பது அயம்வீரம், அவற்றை நன்கு அரைத்து சிவக்க வறுப்பது சண்ட மாருதம், பொருட்களைப் புடம் போடுவது அயம், அவற்றை எரித்து சிவக்கச் செய்வது மிருத்யுஞ்சயம். 

சித்த மார்க்கத்தில் வார்த்தைகளுக்கு வெளிப்படைப்பொருள் ஒன்று இருப்பதுபோல உட்பொருளும் இருக்கும் என்று நாம் அறிவோம்.  இங்கு இந்த செந்தூர வகைகளின் உட்பொருளைப் பார்க்கலாம்.  வீரம் என்றால் வாசி என்று அகத்தியர் ரசமணி சூத்திரம் என்ற நூலில் கூறியுள்ளார்.  இவ்வாறு வாசியினால் மலங்களை வறுப்பது அயம்வீரம்,  அவ்வாறு செய்தால் வாசி பெரும்விசையும் பாயும்.  அதுவே சாகாக்கால் ஆகும்.  இதை சண்டமாருதம் அல்லது பெரும் காற்று என்று கூறலாம்.  இந்த சாகாக்கால் இறக்கிய அமிர்தம் சக்கரங்களில் தங்கி அவை குறிக்கும் நிலைகளை தத்துவங்களைப் புடம்போடுகிறது.  இதுவே அயம்.  அவ்வாறு செய்தால் மரணத்தை வெற்றி கொண்ட நிலை மிருத்துயுஞ்சய நிலை கிட்டுகிறது.


மாயை என்னும் விசை சாத்திரங்களில் கொடுத்துள்ள முறையைக் கடைப்பிடித்து மேலே ஏறி சொக்கி நிற்கும் நிலையை அடைந்து ஆக்ஞையில் ஸ்திரமாக நிற்கிறது.  அப்போது அது காயாதி கற்பத்தைத் தேடி அதைப் பெற்று அந்த கற்பத்தால் மலங்களை செந்தூர பற்பமாக்குகிறது.  இது அயம் வீரம் எனப்படுகிறது.  இவையனைத்தும் மாயையின் விளையாட்டு என்கிறார் அகத்தியர். இவ்வாறு அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்தும் மாயையே அதைக் கடக்கவும் உதவுகிறது.

3 comments:

  1. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
    விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
    அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே.

    ReplyDelete
  2. yes, the body becoming red is the chendhooram

    ReplyDelete
  3. Heard the song sree gana nadha sindoora varna?

    ReplyDelete