Sunday 14 August 2016

473. Cannot be described, should experience it


Verse 473
எண்ணை என்றால் நல்லெண்ணெய் விட்டு மைந்தா
இன்பமுடன் தானுருக்க ஈயமாகும்
பெண்ணை யொத்த தாரமடா ஈயமானார்
பொன்னான பொன் விளையும் புகழ்ந்து பாரு
கண்ணை என்ற அரிதார ஈயந்தன்னை
கருத்தினிலே யான் சொல்லவென்றால் மெத்த கஷ்டம்
என்னை வளர்த்தெடுத்த குருநாதன் சொன்னார்
என்மகனே நீயுமிந்தப் படிதான் பாரே

Translation:
Oil means the good oil, adding it son,
If it is melted with pleasure it will become eeyam (lead)
The wife (adhara) like a lady- became eeyam
Gold will occur, praise and see
The eye, the aridhaara eeyam
It is difficult to describe it
The gurunatha who nurtured me told me,
My son!  You also see it through this method

Commentary:
Nallenai means sesame oil,  It also means good oil.  We saw that en means number and so this is good number or the eight and two, akara ukara.  The fire of kundalini that rises by this process melts the principles in its path and turns them all into sakti, the creative power.  The lady here is vaalai.  The adhara became ee.  Golden body ensues.  The eye is the third eye at ajna.  Agatthiyar concludes this verse saying that it is difficult to describe the sakti and one has to experience it through this method that his Gurunatha, Murugan taught him.


நல்லெண்ணை என்றால் எள்ளெண்ணை என்று நல்ல எண் என்றும் பொருள்.  நல்ல எண் என்பது எட்டும் இரண்டும் அல்லது அகார உகாரங்கள்.  இந்த வழியில் எழுப்பிய குண்டலினி அக்னி தனது வழியில் உள்ள தத்துவங்களை உருக்கி அவற்றை ஈயம் அல்லது சக்தியாக மாற்றுகிறது.  இந்த அக்னி வாலைப் பெண் என்றும் இதனால் ஆதாரங்கள் ஈயம் அல்லது சக்தியாகின்றன என்றும் பொன் மேனி விளைகிறது என்றும் ஈயம் என்பது கண் எனப்படும் புலன்கடந்த உணர்வைக் குறிக்கிறது என்றும் காட்டும் அகத்தியர் இந்த சக்தியை விளக்குவது கடினம், அதை ஒருவர் தான் தனது குருநாதரிடம் அறிந்துகொண்டு உணர்ந்ததைப் போல உணரவேண்டும் என்றும் கூறுகிறார்.  அகத்தியரின் குருநாதர் முருகன் ஆவார்.

No comments:

Post a Comment