Thursday 11 August 2016

472. Aridhaara lead

Verse 472
அரிதார ஈயம்

ஆமப்பா கனகமென்ற தங்கத்தாயை
அருமையுடன் காணுதற்கு அங்கங்கேளு
ஓமப்பா வீரமுடன் லிங்கங் கூட்டி
உண்மையுடன் கமலரசந் தன்னால் ஆட்டி
தாமப்பா தாரமதுக் கங்கி பூட்டி
சங்கையுடன் ரவிதனிலே காயப்போட்டு
நாமப்பா சொல்லுகிறோம் அயக்கரண்டி
நன்மையுடன் கவசமிட்டு எண்ணை குற்றே

Translation:

The lead paint

Yes son, to see the golden mother, the kanaka
Listen to the part that will help to see her lovingly,
Om son, add veeram and lingam with it
Grinding it with the rasa of lotus,
Locking the fire to the dhaaram (aadhaara)
Dry it carefully in ravi (sun-pingala)
(nama) We are saying the ladle of iron (ayam)
Adding the shield, pound the oil (number).

Commentary:
From this verse onwards Agatthiyar begins verses that sound like alchemy.  The title of this verse is aridhaara eeyam which means lead paint. It actually means aaru aadhaara or six adhara ee am- the sakthi that is stabilized in the body.  We have seen before that the seed letter ang draws the universal energy inside the body and am stabilizes it inside.  Thus the title means drawing the universal energy and stabilizing it in the six adhara. 

Now the verse:  The golden mother is Sakthi.  To see her the yogin has to join the omkara or the five elements with veeram, the sakthi and lingam the siva.  In other words, the omkara is joined with nadha and bindhu.  Veeram also represents the mind and the lingam or sign represents consciousness, the fundamental characteristic of a soul.  Veeram and lingam also refer to specific mantra that are not said explicitly here.  These are joined together with the amrit, the essence of the lotus.  This combination is burnt in the cakra with the fire of kundalini.  Dhaaram angi pooti means adorning the cloak to the wife, commonly.  This is then dried in the sun or  surya mandala which spans the region between the navel and the throat chakra.  Agatthiyar begins the next line as “naamappaa sollukirom” which means we are telling.  Naam also means nama.  They represent the muladhara and svadishtana.  They function as the shield for the soul.  The soul’s travel begins at manipuraka.  Ayam means iron.  It also means a and ya or the akara and yakara- the muladhara and ajna which represent akara and yakara.  “ennai kuttru” means pound to get the oil.  It also means pound the number.  The number here is eight and two or akara and ukara. 

இப்பகுதியிலிருந்து அகத்தியர் ரசவாதம் போலத் தோன்றும் பாடல்களால் தத்துவங்களை விளக்குகிறார்.  இப்பாடலின் தலைப்பு அரிதார ஈயம்.  அரிதாரம் என்பது ஆதாரம் என்பதன் இடத்தில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உள்ளது.  ஏனெனில் இப்பாடலில் அவர் ஆறு ஆதாரங்களின் செயல்பாட்டை விளக்குகிறார்.  ஈயம் என்பதன் விளக்கத்தைப் பார்ப்போம்.  இ+அம் என்பதை உச்ச்சரிக்குபோது ஈயம் என்றாகிறது.  இ என்பது சித் கலா, உலகமாகப் பரிமளிக்கும் சக்தி.  அதை உடலில் பிரணனாக உணரலாம்.  இந்தப் பிராணனை உடலில் சமன்படுத்தி அதிகரிக்கச் செய்வது அம் என்ற பீஜ எழுத்து.  இவ்வாறு அரிதார ஈயம் என்பது ஆறு ஆதாரங்களில் பிரபஞ்ச பிராணசக்தியை ஈர்த்து சமன்படுத்துவது என்று பொருள் தருகிறது.

கனகத் தாய் என்பது சக்தி.  அவளைக் காண ஒரு யோகி ஓம்காரத்தை அல்லது பஞ்ச பூதங்களை வீரம் எனப்படும் சக்தியுடனும் லிங்கம் என்னும் சிவத்துடனும் சேர்க்கவேண்டும்.  அதாவது பஞ்ச பூதங்களை நாத விந்துக்களுடன் சேர்க்க வேண்டும்.  வீரம் என்பது மனம், லிங்கம் என்பது உணர்வு என்றும் பொருள் படும்.  இவை இரு மந்திரங்களையும் குறிக்கலாம்.  இவ்வாறு சேர்த்தவற்றை கமலரசம் கொண்டு ஆட்டவேண்டும்.  அதை சக்கரங்களில் அக்னியைக் கொண்டு எரிக்கவேண்டும்.  அதன் பிறகு அதை ரவி அல்லது சூரிய மண்டலத்தில் உலர்த்த வேண்டும்.

தாரம் அங்கி பூட்டி என்பது மனைவிக்கு அங்கி அணிவித்து என்ற பொருளைத் தருகிறது.  ஆனால் பொருள் அதுவல்ல. தாரம் என்பது ஆதாரம், அங்கி என்பது அக்னி.  ஆதாரங்களில் அக்னியை எழுப்பி என்று இதற்குப் பொருள்.


நாமப்பா சொல்லுகிறோம் என்று அடுத்த வரியைத் தொடங்குகிறார் அகத்தியர்.  இது நாங்கள் கூறுகிறோம் என்று பொருள் தந்தாலும் நாம் என்பது நம என்பதன் இடத்திலும் இடப்பட்டிருக்கலாம்.  இந்த இரு அட்சரங்களும் மூலாதாரத்தையும் சுவாதிஷ்டானத்தையும் குறிக்கின்றன.  ஆத்ம உணர்வின் பயணம் மணிபூரகத்திலிருந்து தொடங்குகிறது.  அயம் என்பது ஆத்மாவைக் குறிக்கும்.  அதற்குக் கீழ் உள்ள இந்த இரு சக்கரங்களும் அதற்குக் கவசங்களாக இருக்கின்றன.  அயம் என்பது அ மற்றும் யம் என்ற இரு எழுத்துக்களைக் குறிக்கும்போது மூலாதாரத்தையும் ஆக்ஞையையும் குறிக்கின்றன.  எண்ணைக் குற்று என்பது எண்ணெயை எடுக்கக் குற்று என்பதைப் போலத்தோன்றினாலும் இந்த இரு சக்கரங்களின் மூலம் உயருணர்வைப் பெறுவதை எட்டு இரண்டு என்ற எண்களின் ரசத்தைப் பெறுவதைக் குறிக்கிறது.  

No comments:

Post a Comment