Tuesday 16 August 2016

475. Gendhaka Thailam

Verse 475
பண்ணப்பா கவசமது நன்றாய் செய்து
பாலகனே புடம்போட பற்பமாகும்
என்னப்பா வென்று சொல்லி இருந்துவிட்டால்
ஈடேற்ற மில்லையடா தன்னைப் பாரு
விண்ணப்பா அந்தமதில் தன்னைப் பாரு
மெய்யுருகக் காணுமடா அங்கத் தங்கந்
தன்னப்பா ரங்கமடா தங்கமாகுந்
தாயான கெந்தகத்தின் தைலங் கேளே

Translation:
Do the shielding well,
The young one!  Through slow burning it will become ash
If you remaining saying, “What?”
There is no recourse.  See the self
See the self at the terminus of the space (ajna)
It will be seen, with the body melting, the golden body
The self, the arena, will become gold,
Listen about the medicated oil of gendhakam (Sulphur/muladhara).

Commentary:
During vaasi yoga the vaalai or the combination of prana, breath, mind and consciousness are raised to each of the cakras, starting with the muladhara.  This process burns the principles that the chakra represents.  These principles merge at the ajna and appear as a multicolored entity, each principle of the element that the chakra represents having an individual color.  Siddhas call this as pancha varna or five/multicolored form.  These principles bring about the universe with distinctions.  So when the yogin ties the energy in the chakra and burns it slowly these principles become ash.  This is the only way to transcend these principles. When the yogin reaches the terminus of space, ajna, only the soul or consciousness remains.  The elements that cause the material body merge and the soul is seen with a golden body. 

Gold is considered a precious metal because it does not undergo chemical transformation easily.  It remains in its elemental state without combining with other elements.  It does not undergo chemical reactions easily.  The body at ajna is called golden because it represents the soul in its pure state, its original state, without getting influenced by the distinguishing principles. The arena is the ajna.  The medicated oil of gendhakam is the process of melting the principles represented by muladhara.

வாசியோகத்தின்போது வாலை எனப்படும் பிராணன், மூச்சு, மனம் மற்றும் உணர்வு ஆகியவற்றின் கூட்டு மூலாதாரத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு சக்கரத்தின் ஊடேயும் ஏற்றப்படுகிறது.  இந்த வழிமுறை, ஒவ்வொரு சக்கரமும் குறிக்கும் தத்துவங்களை எரிக்கிறது.  இதையே அகத்தியர் புடம் போட்டு பஸ்மமாக்குதல் என்கிறார்.  இந்த தத்துவங்கள் அனைத்தும் ஒன்றாகி ஆக்னையில் தென்படுகின்றன.  இதை சித்தர்கள் பஞ்ச வர்ணம் அல்லது இந்திரசாலம் என்கின்றனர். இந்த தத்துவங்களே வேறுபாடுகள் உள்ள பிரபஞ்சமாகத் தென்படுகின்றன.  அவை அனைத்தும் ஆக்னையில் ஒன்றாகி ஆத்மா பொன்னிற மேனியுடன் காணப்படுகிறது.


பொன்னை விசேஷமான உலோகமாகக் கருதுவதற்குக் காரணம் அது பிற உலோகங்களுடன் எளிதில் கலப்பதில்லை, வேதியல் மாற்றத்துக்கு உட்படுவதில்லை.  தனது தனித்தன்மையுடனேயே காணப்படுகிறது.  ஆத்மா தங்கமாகக் காணப்படுவது என்று கூறுவது அது தனது தனிப்பட்ட நிலையில் இருப்பதைக் குறிக்கிறது.  இப்பாடலில் அரங்கம் என்று குறிப்பிடப்படுவது ஆக்ஞை.  கெந்தகத்தின் தைலம் என்பது மூலாதாரத்தை உருக்குவதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment