Sunday 21 August 2016

477. Further processing of medicated oil

Verse 477
கேளடா தயிலமத்தில் மைந்தா கேளு
கேள்வியென்ன புழுகுடனே சூடன்கூட்டி
ஆளடா தயிலமத்தில் பொடியைப் போட
அப்போது தயிலமது தண்ணீராகுங்
கேளடா இல்லாத தண்ணீர் தன்னில்
கூர்மையுடன் மனோசிலையைத் துவைத்து வாட்ட
வாளடா வாட்டினத்தை உருக்கி மைந்தா
வளமான தங்கமதிற் சேர்த்துக் காணே

Translation:
Listen son, in the medicated oil
Add the civet along with camphor
Adding the powder to the oil
It will become watery
Listen, in the water that is nonexistent
Adding the arsenicum rubrum wash and toast it
Son, melting it
Join it to the gold and see.

Commentary:
Agatthiyar completes the instructions of the previous verse.  The medicated oil is the bindu.  Civet is a fragrance popularly used in worship rituals.  This corresponds to the earth principle (fragrance) and the muladhara chakra.  Agatthiyar says add these to the camphor.  The word he uses is “soodan”.  This also means “one who adorns” and thus corresponds to the jiva whose characteristic is consciousness.  When these are joined with the energy from the semen then the semen becomes watery.  This is then added to “manosilai” or arsenicum rubrum.  Manosilai is popular in alchemy.  Some of its other names are red “aridharam” vaani, naanmukhan devi.  So we can see that it corresponds to the adhara.  This is confirmed by the next line where he says wash it and toast it.  This will melt the adhara and it is joined to the gold, the svadishtana.


முந்தைய பாடலில் தொடங்கியதை இப்பாடலில் முடிக்கிறார் அகத்தியர்.  தைலம் என்ற விந்துவுடன் புனுகையும் சூடனையும் சேர்க்குமாறு அவர் கூறுகிறார்.  புனுகு என்பது ஒரு வாசனைத் திரவியம், பூஜைகளில் உபயோகிக்கப்படுவது.  வாசனை திரவியத்தை சமர்ப்பிப்பது என்பது இறைவனுக்கு மணத்தைக் கொண்ட பூமி தத்துவத்தைச் சமர்ப்பிப்பது என்பதற்கான குறியீடு.  புலன்களில் இது முகர்வது அல்லது மூக்கைக் குறிக்கும்.  இவ்வாறு புனுகு என்பது மூலாதாரத்தைக் குறிக்கிறது. சூடன் என்பது கற்பூரம் என்பதுடன் “சூடிக்கொள்பவன்” அல்லது ஜீவன் என்றும் பொருள் தருகிறது.  இவ்வாறு இது உணர்வைக் குறிக்கிறது.  இந்த மூன்றையும் தைலத்துடன் கலந்தால் அது தண்ணீராகும் என்கிறார் அகத்தியர்.  தண்ணீர் என்பது சுவாதிஷ்டான சக்கரத்தைக் குறிக்கிறது.  இவ்வாறு வாலை தனது பயணத்தைத் தொடங்குகிறது.  இவற்றுடன் மனோசிலையைத் துவைத்து வாட்ட வேண்டும் என்கிறார் அகத்தியர்.  மனோசிலை என்பது ரசவாதத்தில் ஒரு முக்கியமான பொருள்.  அதை சிவப்பு அரிதாரம், நான்முகன் தேவி, வாணி என்றும் அழைக்கின்றனர்.  இவ்வாறு இது ஆதாரங்களைக் குறிக்கிறது.  மனோசிலையைத் துவைத்து வாட்டு என்றால் அதை இந்தத் தண்ணீரால் நனைத்து குண்டலினி அக்னியால் வாட்டுவது என்று பொருள்.  இதை தங்கம் எனப்படும் சுவாதிஷ்டானத்துடன் சேர்த்துப் பார்க்குமாறு அகத்தியர் கூறுகிறார்.

No comments:

Post a Comment