Monday 1 August 2016

464. 6, 5, 4, 3, 2, 1

Verse 464
பாரப்பா ஏழு வகைத் தோற்றந் தன்னிலே
பதிவான மடபதிகள் ஆறு மாச்சு
காரப்பா மடபதியில் பஞ்ச கர்த்தாள்
கருணையுள்ள நால்வேதங் கருவாய்க் கட்டி
நேரப்பா நின்ற திருமூர்த்தியானார்
நிறைந்த திருமூர்த்தி சத்தி சிவமுமானார்
சாரப்பா சத்திசிவம் ரெண்டும் ஒன்றாய்
தானாகித் தானவனாய் ஏகமாமே

Translation:
See son, among the seven types of life forms
It became the madapathis six
In the madapathi are the pancha kartha (five actors)
Tying the merciful four Vedas as essence
He became the Tirumuthi
The Trimurthy became Sakthi and Sivam
Associate with Sakthi Sivam as singularity
Becoming Self, with the self as Him, as singularity.

Commentary:
While seven types of lives refers to different lifeforms Agatthiyar has shown that they also represent seven types of people. Those who have supreme qualities are the devas.  Humans are those who have good qualities such as mercy, patience as well as bad qualities such as jealousy, anger.  Animals are those who are ruled by the ego.  Birds are those who are heavily influenced by the senses.  Plants are those who cannot distinguish between good and bad.  Aquatics are those who speak ill of even those who give them things and help them.  Thus, the seven lifeforms represent seven types of people.

The word madapathi, when split as madam+pathi means the loci.  This refers to the six chakras.  Among the six cakras, the five have the five actors or pancha kartha, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva, as the lords.  The four Vedas explain that the world is a representation of the three muthi’s, Siva, Sakti and Jiva.   Through yoga the jiva leaves its limited state and becomes Sakthi and Sivam.  When even this duality is crossed and the state of singularity is attained then everything becomes the Self.  There are no distinctions anymore.

Agatthiyar is continuing the play with numbers.  Amavasi may mean “am-maha-vasi” or that great vasi.  With the help of vasi or the breath and prana combination all kinds of distinctions are crossed.  Agatthiyar begins with the body with 10 instruments, 9 apertures through which sensations occur, 8 siddhis, ashtanga yoga, 7 types of lifeforms, 6 chakras, 5 kartha or lords, 4 Vedas the essence of everything, 3 Murthys, 2-Sakthi and Sivam and finally the state of singularity.

ஏழு வகைத் தோற்றங்கள் என்பது ஏழு வித உயிர்களைக் குறித்தாலும் அவை ஏழு நிலைகளில் இருக்கும் மனிதர்களையும் குறிக்கின்றன.  தனது எழுவகைத் தோற்றம் என்ற நூலில் அகத்தியர் இந்த ஏழு வகை மனிதர்களை விளக்குகிறார்.

மனிதருள் கற்போடு வாழ்பவர்கள் மாணிக்கங்கள், உத்தமர்கள்.  அவர்களே தேவர்கள், வானவர்கள். இவர்களை அடுத்து மனிதர் என்பவர் அன்பு, கருணை, பொறுமை போன்ற நற்குணங்களையும் கோபம், பொறாமை போன்ற தீய குணங்களையும் கொண்டவர்கள்.  விலங்குகள் என்பவர்கள் அகந்தையால் ஆளப்படுபவர்கள்.   பறவைகள் என்போர் புலன்களின் தாக்குதல்களுக்கு ஆட்படுபவர்கள்.  தாவரங்கள் என்பவர்கள் நன்மை தீமை என்று பாகுபடுத்திக் காண முடியாதவர்கள், விவேகமற்றவர்கள்.  தனக்குப் பொருளோ அருளோ கொடுப்பவரையும் இகழ்ந்து பேசுபவர்கள் நீரில் வாழ்பவர்கள்.  மானமின்றி இரந்து வாழ்பவர்கள் ஊர்வன எனப்படும் புழு பூச்சிகள் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு ஏழுவகை உயிரினங்கள் என்பவை ஒருவரது நடத்தையை வைத்தே என்று காட்டுகிறார் அகத்தியர்.

மடபதி என்ற சொல்லை மடம்+பதி என்று பிரித்தால் அது ஒரு இடத்தைக் குறிக்கிறது.  ஆறு மடபதிகள் என்பது ஆறு சக்கரங்களைக் குறிக்கிறது.  இந்த சக்கரங்களில் ஐந்தில் பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற ஐந்து கடவுள்கள் ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களைச் செய்கின்றனர்.  இவற்றை விளக்குவது நான்கு வேதங்களாகும்.  இந்த வேதம் விளக்குவது மூன்று மூர்த்திகள் எனப்படும் சக்தி, சிவம், ஜீவன் என்பவர்களை.  யோகத்தின் மூலம் ஜீவன் இந்த மூன்றாக இருக்கும் நிலையைக் கடந்து சக்தி சிவம் என்று இரண்டாக இருக்கும் நிலையையும் முடிவில் சிவம் எனப்படும் தான் என்ற நிலையையும் அடைகிறது என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த வழிமுறை அம்+மா+ வாசி அல்லது அந்த மகா வாசி எனப்படும் பிராணன் மூச்சுக் கூட்டால் நடைபெறுகிறது என்கிறார் அகத்தியர்.  இதுவே அம்மாவாசியின் சூட்சுமம்.


முந்தைய பாடலில் தொடங்கிய எண்கள் விளையாட்டை இப்பாடலில் முடிக்கிறார் அகத்தியர்.  தசமி எனப்படும் பத்து புலன்களைக் கொண்ட ஒன்பது வாசல்களால் அந்த புலனுனர்வுகளைக் கொண்ட உடலினால் அஷ்ட சக்திகள் எனப்படும் எட்டு சித்திகள் கிட்டுகின்றன.  இவற்றைக் கொண்ட உயிர்கள் ஏழு வகையாகத் தோற்றமளிக்கின்றன.  ஆறு மடபதிகள் எனப்படும் சக்கரங்களில் ஐந்து கர்த்தாக்கள் இருந்துகொண்டு ஐவித தொழில்களைச் செய்கின்றனர்.  அதை விளக்குவது நால்வகை வேதங்கள்.  அவற்றின் சாரம் மும்மூர்த்திகள்.  இவற்றில் ஜீவன் சக்தி சிவம் என்னும் இருமை நிலையையும் சிவம் அல்லது தான் என்ற ஒருமை நிலையையும் அடைகிறது என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment