Sunday 7 August 2016

470. Siva yogam

Verse 470
அடுத்துமிக வாழ்வதற்கு மைந்தா கேளு
ஆதியந்த பூரணமாம் அண்டதேகி
விடுத்துமிக அதின் ரசத்தை வாங்கிக் கொண்டு
வேதாந்த சத்திசிவ பானமூட்டி
கடுத்து மிகப் போகாமல் கற்பூரஞ் சாற்றி
களங்கமில்லா ரவிதனிலே காய வைத்து
எடுத்துமிகப் பூரணமாய்க் கொண்டாயானால்
ஏகாந்த மான சிவ யோகியாச்சே

Translation:
Son, listen, to live associated so,
Going to the universe (andam) which is the origin and terminus
Accepting its essence
Kindlining the drink of Vedanta Sakti Sivam
Adding camphor to prevent it from becoming intense
Drying it in the faultless ravi
If you consume it as poornam
It became the siva yogam.

Commentary:
In vaasi yogam the breath is raised to dvadasantha, the origin and the terminus of a life form.  The essence or universal life force is received from that state.  The drink of Vedanta sakti and sivam are nadha and bindu.  To this is added the state at ajna which appears as the smoke of camphor.  This is then stabilized in the body through the pingala nadi, the surya or ravi.  It is then received into the body as poornam.  Agatthiyar is describing what to do with this poornam so received.


வாசி யோகத்தில் வாலை எனப்படும் மூச்சு, பிராணன், மனம், உணர்வு என்றவற்றை துவாதசாந்தத்துக்கு ஏற்றவேண்டும்.  அதுவே ஒரு உயிர் தோன்றுமிடம், முடியுமிடம்.  அங்கிருந்து பிரபஞ்ச பிராண சக்தி அல்லது உயிர்சக்தியைப் பெற்று, வேதாந்த சக்தி சிவம் எனப்படும் நாத பிந்துக்களுடன் கூட்டி கற்பூரம் எனப்படும் ஆக்ஞைக்குக் கொண்டு சென்று ரவி எனப்படும் பிங்கல நாடியின் மூலம் உடலில் நிறுத்த வேண்டும்.  அவ்வாறு பெற்ற சக்தியே பூரணம் எனப்படும்.  இதை மேலும் என்ன செய்வது என்பதை அகத்தியர் அடுத்த பாடலில் கூறுகிறார்.  

No comments:

Post a Comment