Monday 22 August 2016

478. Gold, copper, silver

Verse 478
சேர்த்து மிகப் பார்க்கையிலே தங்கஞ் செம்பாஞ்
சிவசிவா தங்காதி செம்புதன்னை
பார்த்துமிக வெள்ளியிலே பத்துக்கொன்று
பக்குவமாய்த் தான் கொடுத்து ஊதிப்பாரு
காத்துமிக கனியிலே ஊதிப்பார்க்க
கைலாச மேருவது தங்கமாச்சு
சாத்தியதோர் தங்கமதைக் கண்டு நீயும்
தன்மையுடன் பூரணமாய் வாழ்வாய் பாரே

Translation:
When seen together the gold becomes copper
Siva sivaa the gold and copper
Seeing them well, ten to one in silver
Give it carefully, blow and see
The air in the fruit, when blown and seen
The kailasa meru became golden
Seeing the adorned gold, you
Will live as poornam. See.

Commentary:
In the previous verse Agatthiyar said that when the gold is added to the arsenicum rubrum then it will become copper.  The arsenicum corresponds to the chakra, the gold to manipurakam.  Now let us see why svadhishtana is gold. 

Planet
Chakra
Metal
Sun/moon
Ajna
Copper/bronze / செம்பு/வெண்கலம்
Budha (mercury)
Vishuddhi
Brass/பித்தளை  
Sukra
Anahata
Silver வெள்ளி
Mangala (Mars)
Manipuraka
Copper செம்பு
Guru (Jupiter)
Svadhishtana
Gold தங்கம்
Sani (Saturn)
Muladhara
Iron இரும்பு
Rahu and ketu

Lead, lead and earth ஈயம்

Now, we shall see the verse.  The gold coreponds to svadhishtana chakra, the copper corresponds to manipuraka, the golden copper corresponds to ajna.  By toasting the adhara with the fire of kundalini, at the muladhara, the svadishtana is also brought in.  This, then rises to the manipuraka the copper.  Now adding one of ten is prana, one the ten vital breaths.  The prana is blown with force with force at the vishuddhi. Now the fruit is the lalata, siddhas call the amrit that oozes from there as the milk of mango, maangaai paal.  When the above process is continued the kailasa meru or the whole of sushumna will glow like golden copper.  When the yogin reaches this stage he will like as poornam.

முந்தைய பாடலில் மனோசிலையை சேர்த்தால் தங்கமாகும் என்று அகத்தியர் கூறினார். அங்கு தங்கம் என்றால் சுவாதிஷ்டானம் என்று கூறினோம்.  அது ஏன் என்று இப்பாடலில் பார்க்கலாம்.  நமது உடலில் சக்கரங்களுக்கும் கிரகங்களுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.  அதேபோல் ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களும் ஒரு குறிப்பிட்ட உலோகத்திலிருந்து அதிகமாக வெளிவருகிறது.  அதை மேற்காணும் பட்டியலில் காணவும்.
சூரியன்- ஆக்ஞை செம்பு, சந்திரன்-ஆக்ஞை வெண்கலம், புதன்-விசுத்தி பித்தளை, சுக்கிரன்-அனாகதம் வெள்ளி, செவ்வாய்- மணிபூரகம் செம்பு, குரு-சுவாதிஷ்டானம் தங்கம், சனி- மூலாதாரம் இரும்பு.


இப்போது பாடலைப் பார்ப்போம்.  ஆதாரமான மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி அக்னி சுவாதிஷ்டானத்தைச் சேர்த்துக்கொள்வதே தங்கத்தைச் சேரு என்று குறிப்பிடப்படாது.  அதனுடன் வெள்ளியில் பத்தில் ஒன்று என்பது பத்து பிராணன்களில் ஒன்றான பிராணனை விசையுடன் விசுத்தியிலிருந்து ஊதவேண்டும்.  அப்போது காற்று எனப்படும் பிராணன் கனி எனப்படும் லலாடத்தை அடைகிறது.  இதை சித்தர்கள் மாங்கனி என்று அழைக்கின்றனர். அப்போது கைலாச மேரு எனப்படும் சுழுமுனை நாடி முழுவதும் அதன் மேற்புறமான சஹாஸ்ராரமும் தங்கமான செம்பைப் போல ஒளிருகின்றன.

No comments:

Post a Comment