Monday 15 August 2016

474. copper bhasma

Verse 474
தாமிர பற்பம்
பாரப்பா இன்னமொரு கருவைக்கேளு
பதிவான பூரமடா கற்பூரந்தான்
நேரப்பா கற்பூரம் அதனோடோக்க
நிசமான கெந்தகமுங் கூட்டிச் சேர்த்து
காரப்பா கல்வமத்தில் அரைக்கும்போது
கசிந்துமிக சிவமாகுஞ் சிவத்திற் கேளு
சாரப்பா அரிதாரம் வீரஞ் சேர்த்து
தானரைத்து துட்டதற்கு கவசம்பண்ணே

Translation:
Copper bhasma
See son, hear about another essence
The pooram, karpooram
The karpooram equivalent to that
Add gendhakam (Sulphur) to it
While grinding it in the mortar
It will soften and become sivam,  listen about sivam
Add aridhaaram and veeram to it
Grind it and perform kavacham.

Commentary:
The pooram mentioned here is prapancha prana sakti.  Its equivalence is the pranasakthi in the body.  These two are joined together.  Kendhagam (Sulphur) stands for gandham or fragrance.  This represents the earth principle and the muladhara cakra.  Thus the prapancha prana sakthi and the prana sakti in the body are joined together at the muladhara.  Grinding them together in kalvam or mortar means mixing together with consciousness spanning the muladhara and ajna.  Ajna is called kal kottam or stone fort.  Thus, kalvam represents the ajna.  Sivam adds strength to this idea as it represents the akara state.  The aridharam, as we saw before, are the chakras.  Veeram is sakti.  Performing kavacham means enclosing it and protecting it from dissipation at the chakras.
The word thamira parpam, is interesting.  Thaam ira means the limited self dying and becoming universal self.  Parpam or bhasma is frying or burning something so that it becomes an ash.  The limited self is burnt in the fire of kundalini through the method mentioned here and burnt into universal state.  The vibhuti that the Saivas adorn represents this process.  The metal, copper corresponds to the manipuraka cakra.  The soul’s jouney begins from this chakra.  Hence, in this respect also the term thamra bhasma means the soul’s journey.

பூரம் என்று இங்கு குறிப்பிடப்படுவது பிரபஞ்ச பிராண சக்தி. அதற்குச் சமமாக இருப்பது உடலில் உள்ள பிராண சக்தி. இந்த இரண்டு சக்திகளும் ஒன்றாகக் கூட்டப்பட வேண்டும்.  கெந்தகம் என்பது கெந்தம் அல்லது கந்தம் என்று பொருள்படுகிறது.  கந்தம் என்பது பூமி தத்துவத்தைக் குறிக்கிறது.  உடலில் அதன் இடம் மூலாதாரம்.  இவ்வாறு பிரபஞ்ச பிராண சக்தியும் உடலில் உள்ள பிராண சக்தியும் ஒன்றாகக் கூட்டப்பட்டு மூலாதாரத்தையும் ஆக்ஞையையும் உணர்வினால் சேர்க்கவேண்டும்.  கல்வம் என்பது கலுவம் என்று அரைக்கும் கருவியைக் குறிக்கும்.  அது கல் என்று பொருள்கொண்டு ஆக்ஞையையும் குறிக்கும்.  சித்தர்கள் ஆக்ஞையை கல்குகை என்கின்றனர்.  இவ்வாறு ஒன்றாக்கப்பட்ட சக்திகளும் உணர்வும் சிவமாகும், சிவநிலையை பரவுணர்வு நிலையை அடையும்.  அவற்றை அரிதாரம் எனப்படும் சக்கரங்களில் வீரம் எனப்படும் சக்தியாக எழுப்பி அவை வெளியேறிவிடாமல் கவசமிடவேண்டும் என்கிறார் அகத்தியர்.

தாமிர பற்பம் என்ற சொல் ஒரு சுவையான பொருளை அளிக்கிறது. தாம் எனப்படும் அளவுக்குட்பட்ட ஆத்மநிலை இறந்து, பஸ்மமாக்கப்பட்டு பரநிலையை அடையும் வழிமுறையை இப்பாடல் கூறுகிறது. பஸ்மம் எனப்படும் வழிமுறையில் ஒரு பொருள் வறுக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ வெள்ளையான சாம்பல் நிலையை அடைகிறது.  இங்கு எரிக்கப்படுவது அளவுக்குட்பட்டமை, எரிக்கும் தீ குண்டலினி அக்னி.

தாமிரம் என்னும் உலோகம் மணிபூரக சக்கரத்தைக் குறிப்பது.  இந்த சக்கரத்திளிருந்துதான் ஆத்மா தனது பயணத்தைத் தொடங்குகிறது.  இவ்வாறும் தாமிர பற்பம் என்பது நாம் மேலே கூறிய பொருளைத் தருகிறது.

No comments:

Post a Comment