Verse 479
பாரப்பா வாழ்வதுவும் ஆசை ஆசை
பலபணி தி பூணுவது மாசை மாசை
நேரப்பா நிற்பதுவு மாசை ஆசை
நிஷ்டை என்ற சிவயோக மாசைமாசை
காரப்பா சகலகலை வாசியேறி
கண்ணறிந்து பார்ப்பதுவு மாசையாசை
சாரப்பா காயாதி கர்ப்பந்தன்னை
சந்தித்து நிற்பதுவு மாசைதானே
Translation:
See son, life is desire, desire
Taking up many jobs, desire, desire
Remaining austere, desire, desire
Sivayoga, the nishtai, desire, desire
See son, ascending the vaasi through sakala kalaa
Knowing the eye and perceiving is also desire, desire
Associate with it. Meeting the kayadhi karpam
And remaining with it is also desire.
Commentary:
Pasu, pati and paasam are the three primary triad in Saiva siddhantha. Pasu refers to jiva, pati to Isava and paasam is the attachment which binds the jiva to the world. If this paasam is transformed into interest in the Absolute, then pasu becomes pati. Agatthiyar describes the nature of this paasam which he calls as desire or aasai.
In this context one is reminded of the siddha expression, “aasaiyai arumin aasaiyai arumin Isanodaayinum aasaiyai arumin” In other words, cut away desire, cut away desire, if it is with the Isa cut the desire. Aasai or attachment brings about the distinction of the desired, the desire and the one who desires. By cutting away the desire this multiplicity is cut away and the soul reaches the state of singularity.
Agatthiyar says that worldly life is desire, taking up posts, performing austerities and even sivayoga is desire. The yoga of raising the vaasi, transcending the distinction-causing kalai, knowing the eye of supreme perception and the act of perception is also desire. He says that even the interest or will to meet the karpam, the primal cause of body and remaining with it is desire.
பசு, பதி, பாசம் என்பவை சைவ சித்தாந்தத்தின் மூன்று முக்கிய கோட்பாடுகள். பசு என்பது ஜீவன், பதி என்பது ஈஸ்வரன், பாசம் என்பது பிணைப்பை ஏற்படுத்துவது. இந்த பாசம் உலகத்தோடும் இறைவனோடும், ஒருவரது ஆசைக்கேற்ப பிணைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அகத்தியர், ஆசை அல்லது பாசம் என்பதை இப்பாடலில் விளக்குகிறார். இந்த இடத்தில் சித்தர் பாடல் வரிகளான ஆசையை அறுமின் ஆசையை அறுமின் ஈசனோடாயினும் ஆசையை அறுமின் என்ற வரிகளை நாம் நினைவுகொள்ளலாம். இக்கருத்தை அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.
உலக வாழ்க்கை, பல பதவிகளை ஏற்றுக்கொள்வது, நிஷ்டைகளைச் செய்வது, சிவயோகம் எனப்படும் வாசியை சகல கலைகளையும் கடக்குமாறு ஏற்றி, மூன்றாவது கண்ணை அறிந்து அதனால் பார்ப்பது என்பதுகூட ஆசைதான். காயத்துக்கு ஆதியான கற்பத்தை, காரணத்தை அறிந்து அதனைச் சந்தித்து நிற்பதுகூட ஆசைதான் என்கிறார் அகத்தியர்.