சூரியகிரி சோமகிரி நிதானம்
ஆமாப்பா சுரூபமயம் பூரணமென்றெண்ணி
அடர்ந்தெழுந்த தத்துவத்தை அறிவால் நீக்கி
தாமப்பா ஓமென்ற பிரணவத்தினாலே
தன்னுயிர் போல் மன்னுயிரைத் தான்தானென்று
நாமப்பா சொல்லுகிறோம் நாதாந்த வீட்டில்
நாடிமனங்கொண்டு திரு நயனம் பாரு
சோமப்பா பால்கொண்டு திரு நயனம் பார்க்க
சோமகிரி சூரியகிரி சத்தமாச்சே
Translation:
Yes son,
considering the suroopam as poornam
Removing the
tattva that rises densly, with the help of awareness
With the help
of pranava
Considering other
lives like one’s own
We are saying,
son, in the house of nadhantha
Seek and see
the sacred eyes with the help of the mind
When the
sacred eyes are seens consuming the milk of soma
It became soma
giri, surya giri, sabham.
Commentary:
Somagiri,
suryagiri, udhayagiri, somapaal etc are Siddha paribhasha or esoteric
terms. Agatthiyar describes these in
this and the next verse. He tells us
about the attitude of the yogi who perfroms this yoga. The suroopa he mentioned in the previous
verse is considered as the poornam or natural state, the state of
consciousness. The tattva are limiting
principles-atma tattva, vidya tattva etc that bring about the feeling of limted
existence. Their influence should be
removed. All lives are considered like
one’s own life. All great souls,
Vallalar, Jesus Christ and many others have spoken about this. From this verse we see that it is an
essential step in yoga. The yogin goes
to the house of nadhantha or ajna and with the help of the mind he perceives
the sacred eye. Thiru nayanam means
sacred eye as well as the eye that reveals the sacred. Thus the third eye is this state of
perception. Marking a third eye on Siva’s
forehead indicates this state and not the presence of an actual eye! The somapaal or milk of soma is the divine
nectar. Agatthiyar says that it will
become somagiri, suryagiri sabdham.
சோமகிரி சூரியகிரி, உதயகிரி, சோமப்பால் போன்ற சொற்கள்
சித்தர்களின் பரிபாஷை எனப்படுகின்றன. இனி
வரும் பாடல்களில் அகத்தியர் இவற்றில் சிலவற்றை விளக்கப்போகிறார். அதற்கு ஒருவர் சுரூபம் என்று முன்பாடலில்
குறிப்பிடப்பட்டதை பூரணம் என்று, பரவுணர்வு என்று கருதவேண்டும் என்றும் பிற உயிர்களைத்
தன்னுயிரைப் போல எண்ண வேண்டும் என்றும் கூறிகிறார் அகத்தியர். அடர்த்தியாக எழும் தத்துவங்களும்
விலக்கப்படவேண்டும். தத்துவங்கள் என்பவை
ஒரு உயிரை அளவுக்குட்பட்டதாகக் கருதச் செய்யும் வஸ்துக்கள். ஆத்மதத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம்
என்பவை ஒருவர் தான் உடல், தான் கால தேச சக்தி ஆகியவைகளில் அளவுக்குட்பட்டவர் என்று நினைக்கச்
செய்பவை. இவற்றை விலக்கி அனைத்து
உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதவேண்டும் என்கிறார் அகத்தியர். வள்ளலார், இயேசு கிறிஸ்து போன்ற பல ஞானிகள்
இதைப் பற்றிப் பேசியுள்ளனர். வாடிய
பயிரைக் கண்டால் தாமும் வாடுவதாக வள்ளலார் கூறுவது இந்தக் கருத்தில்தான். இப்பாடலின் மூலம் இந்த நிலை பொதுவாக பிறர்க்கு
நன்மை செய்யவேண்டும் என்பதைத் தவிர யோகத்தில் ஒரு முக்கிய நிலை என்பதையும்
அகத்தியர் நமக்குக் காட்டுகிறார். இவ்வாறு
இருந்தால் திரு நயனம் பார்க்கலாம் என்கிறார் அகத்தியர். இதனால் திரு நயனத்தைப் பெறுவது இருப்பின் ஒரு
நிலை என்பது புரிகிறது. இதைத்தான் சிவனின்
மூன்றாவது காண்ணாக, நெற்றிக் கண்ணாகக் குறிப்பிடுகிறார்கள். நெற்றிக் கண் என்பது ஆக்ஞா சக்கரத்தைக்
குறிக்கிறது. திரு நயனம் என்பது புனிதமான
கண், புனிதத்தைக் காட்டும் கண் என்று இருபொருள்படுகிறது. இந்த நிலையில் சோமப்பால் எனப்படும்
அமிர்தத்தைக் குடித்தால் சோமகிரி, சூரியகிரி சத்தமாகும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment