Wednesday, 11 May 2016

391. Om reeng am and pranayama

Verse 391
பாரப்பா சிவயோகம் அங்கம் பார்க்க
பதிவாக றீங்கென்றால் பூரகமேயாகும்
நேரப்பா அம்மென்றால் கும்பகமேயாகும்
நேர்மையுடன் நிலையறிந்து நேசம் வைத்து
சாரப்பா ஓமென்ற ரேசகமே செய்யில்
தவிடாடா தேவாசி தானே தங்கும்
சேரப்பா வாசியது தங்கும் வீட்டில்
சென்றிருந்து அடி நடுவு முடியைக் காணே

Translation:
See son, the part of siva yogam
The reeng means poorakam
The am is kumbakam
Knowing the status, placing love,
Associate with it, if you perform om during rechakam
The vaasi will abide as if even the chaff will not stir
The vaasi will abide in the house
Go there and see the bottom, middle and top.

Commentary:
Agatthiyar mentioned the mantra om reeng am in a previous verse.  He explaining it significance here.  In the previous verse he said reeng is vaalai, am is Siva who emerges as vaasi from the peeta om.  In this verse he says that reeng is inhalation or poorakam. Am is kumbakam and om is rechakam or exhalation.  Thus, om reeng am represents the three steps in pranayama.  When this mantra is uttered the vaasi or the breath and prana will abide.  It will to such an extent that it is as if not even the bran will move.  Bran is a very fine powder that covers rice.  It moves even with a slight wind.  Saying that even the bran will not means there is absolute stillness in vaasi. The adi, mudi, nadu or the bottom, top and middle mean the muladhara, vishuddhi and sahasrara.


முந்தைய பாடலில் அகத்தியர் ஓம் ரீங் அம் என்ற மந்திரத்தைக் கூறினார்.  இப்பாடலில் அதன் முக்கியத்துவத்தைக் கூறுகிறார்.  முந்தைய பாடலில் ரீங் என்பது வாலை. அம் என்பது வாசி எனப்படும் சிவன்.  அந்த வாசி ஓம் என்ற பீடத்திலிருந்து எழுகிறது என்கிறார் அகத்தியர்இப்பாடலில் அவர் ரீங் என்பது ரேசகம், அம் என்பது கும்பகம் ஓம் என்பது பூரகம் என்கிறார்.  இவ்வாறு ஓம் ரீங் அம் என்பது பிராணாயாமத்தின் மூன்று படிகளாகும்.  இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாசி அடங்கும்.  அது எவ்வளவு அசையாமல் இருக்கும் என்றால் காற்றில் தவிடுகூட அசையாமல் இருப்பதுபோல் இருக்கும் என்கிறார் அகத்தியர்.  அடி, நடு, முடி என்றால் மூலாதாரம், விசுத்தி மற்றும் சகஸ்ராரம் என்ற மூன்று சக்கரங்கள் ஆகும்.

No comments:

Post a Comment