Verse 385
நாடிப்பார் மூன்றுவகை சுன்னந்தன்னை
நன்மையுடன் கைமுறையாய்ச் செய்து கொண்டு
தேடிப்பார் சரக்குகள்தான் நன்றாய்க் கட்டுந்
திறமான நவலோகந் தங்கமாகுஞ்
சூடிப்பார் தங்க மென்ற அங்கந்தன்னில்
சோதி சிவமயமான அண்டமென்ற
வாடிப்பார்த் தலையாமல் சொல்லக் கேளு
மகத்தான ருத்திரரை வணங்கிக் காணே
Translation:
Seek and
experience the three types of sunnam
Performing the
procedures with familiarity
Search and
find, the entities will be tied well,
The capable
nine metals/nine worlds will become gold
Adorn and see
in the golden body
The universe
which is golden effulgence
Without fatiguing
roaming seeking it, listen
Salute the
great Rudra and see.
Commentary:
We saw the
three types of sunnam or voids in the previous three verses as that of mind,
prana sakthi in the body and the prapancha prana sakthi. Agatthiyar described how these three should
be brought together and raised through the six cakra to the chandra mandala and
then to sahasrara when all the entitites, sarakku, will be “tied”. “kattu” means solidification. It also means preventing something from
wandering. The mind and the breath which
carries the prana are regulated and merged with the prapancha prana
sakthi. Thus they are prevented from
wandering and getting wasted. Then the “navalokha”
will become gold. This line which looks
like an alchemical procedure is also philosophical. Nava lokha means nine worlds. It also means the worlds created by
experiences. It also means new world,
the new state created by the vaasi yoga.
The nava lokham will become golden, the supreme state that is not degraded
or transformed. Among the metals gold is
considered supreme as it is stable, not transformed or degraded by anything
easily. The body then becomes golden-
this is kaya siddhi. The state of the
soul will be that of effulgent consciousness, jyothimaya sivam. Agatthiyar tells Pulatthiyar to experience
it, worshipping Rudra.
முந்தைய பாடல்களில் மூவகையான சுன்னங்களைப் பற்றி அகத்தியர்
கூறினார். அவை, மனம், உடலில் உள்ள
பிராணன்/மூச்சுக் கூட்டு மற்றும் பிரபஞ்ச பிராண சக்தியாகும். இந்த மூன்றையும் மூச்சை நெறிப்படுத்தி ஒன்றாக்கி
ஆறு ஆதாரங்களின் மூலம் எழுப்பி சந்திர மண்டலத்தை அடையச் செய்தால் நவலோகம்
தங்கமாகும் என்கிறார் அகத்தியர். நவலோகம்
என்பது ஒன்பது வகை உலோகங்களையும், ஒன்பது உலகங்களையும் புதுமையான உலகையும்
குறிக்கும். நவலோகம் தங்கமாகும் என்பது
யோகியின் உடல் சாதாரண பருவுடல் நிலையிலிருந்து பொன்னார் மேனியாகும் என்று
பொருள். சரக்கெல்லாம் கட்டும் என்பது
உடலில் உள்ள தாதுக்கள் கட்டும் என்றும் மனம், பிராணன் உணர்வு என்ற மூன்று
தேவையில்லாமல் அலைந்து வீணாகாமல் அவற்றின் அலைவு தடுக்கப்பட்டு வழிப்படுத்தப்படும்
என்றும் பொருள். இவ்வாறு பொன் மேனியைப்
பெற்ற யோகி சோதிமயமான சிவத்தை பரவுணர்வை அனுபவிப்பார். இந்த அனுபவத்தை ருத்திரரை வணங்கிக் காணுமாறு
அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
No comments:
Post a Comment