Verse 402
தெளிவான வசீகரமும் மோகனமும் நசித்து
திறமான தம்பனமும் உச்சாடனமும் நசித்து
வளியான கிரிசனமும் வேசனமும் நசித்து
மாரணமும் பெதனமும் வகையுடனே நசித்து
பனியான செகச்சால மானதெல்லாம் நசித்து
பரிசனமாய் நின்றதொரு பெண்ணாசை நசித்து
ஒளியாத பெண்ணாசை மண்ணாசை நசித்து
ஒன்று மற்று தன்மயமாய் ஒடுங்குவதே நாட்டம்.
Translation:
Crushing the
clear vaseekaram and mohanam
Crusihing the
sthambanam and ucchaadanam
Crushing the
kirisanam and veshanam
Crushing the
maaranam, bedhanam with all the types.
Crushing the fog,
the jagat jaalam
Crushing the
desire for a woman and related desires
Crushing the
difficult to destroy desire for a woman and land
The goal is to
abide as thanmayam
Commentary:
Agatthiyar is
talking about the ashta karma or eight actions that a yogin is able to
accomplish as a result of yoga siddhi.
They are vaseekaram, mohanam, sthambanam, ucchaadanam, kirisanam,
udhveshanam, maaranam and bedhanam. The
yogin is able to produce all kinds of magical vision or jagat jaalam. He is also able to go beyond the fog created
by the manifested world, the jagat jaalam.
He crosses the desires and reaches a state of sanmayam or selfhood. The desire for woman and land are mentioned
as examples. These represent the three
types of eshanai- putra (offspring) artha (wealth) and ulaga (worldly
attachments) edanai. Agatthiyar
mentioned this is in verse 45 Some say
that it is putra, artha and kalatthra edanai.
Thanmayam
means remaining in the state of self.
இப்பாடலில் அகத்தியர் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு
செயல்களைக் கூறுகிறார். யோக சித்தியினால் பெறப்படும் இவை வசீகரம், மோகனம்,
ஸ்தம்பனம், உச்சாடனம், கிரிசனம், உத்வேஷணம், மாரணம் மற்றும் பேதனம் என்பவை. இவை தவிர அந்த யோகி ஜகத் ஜாலம் எனப்படும் பலவித
மாயா தோற்றங்களையும் ஏற்படுத்த வல்லவராகிறார்.
தான் உலக மாயை அல்லது ஜகத் ஜாலத்தைக் கடக்கிறார், அந்த பனிமூட்டத்தினால்
மதியிழப்பதில்லை. இவை தவிர பெண்ணாசை
மண்ணாசை எனப்படும் ஏடணைகளையும் அவர் கடக்கிறார்.
பாடல் 45ல் அகத்தியர் மூன்றுவித பற்றுக்களைக்
கூறியுள்ளார். அவை அர்த்த ஏடணை, புத்திர
ஏடணை மற்றும் உலக ஏடணை என்கிறார் அவர். சிலர்
அர்த்த, புத்திர மற்றும் களத்திர ஏடணை என்றும் கூறுகின்றனர்.
தன்மயம் என்பது சுயம் என்னும் நிலையில் இருப்பது.
No comments:
Post a Comment