Verse 387
சுத்தி பண்ணும் வகையதுவைச் சொல்லக் கேளு
சுகமாக தானரைத்து வட்டுப் பண்ணி
பத்தியுடன் சட்டி நாடு வைத்துச் சாம்பல்
பத்து மிகத் தீஎரித்து பதத்தைப் பாரு
சித்தியுடன் அனலெழும்பிக் கட்டிப் போகுந்
தீர்க்கமுடன் தானெடுத்து செப்பக் கேளு
புத்தியுடன் செம்பிலரை வாசிதாக்கிப்
பூரணமாய் வெள்ளியிலே பூட்டிப் பாரே
Translation:
Hear about the
method of purification
Grind them
comfortably, make them into a cake
Place it in
the middle of the pot with devotion, turn into ash
By having a
big fire, (turn the ten into ash) and see the status
The fire rises
along with siddhi and it will solidify/get tied
Take it
greatly, and listen,
With buddhi,
attack/hit half of copper, hit half the pot with vaasi
Lock it as
poornam/completely in the silver and see.
Commentary:
This is such a
beautiful verse which describes consciousness ascending through the three
mandala, agni mandala, surya mandala and chandra mandala. Continuing from the previous verse, the
prana, mind and consciousness along with the amrit are merged together and made
into a cake, the cakra. The cake is placed
in the middle of the “pot”, the body/sushumna and burned with the great fire,
the fire of kundalini and turn them into ash.
The expression “saambal patthu” means make it into ash, or the ten are
turned into ash. The ten are the senses
and the experiences from the senses so that the yogin goes beyond sensual
perception. When they are burned
completely into ash the yogin enjoys various siddhis like kaya siddhi, vada
siddhi, yoga siddhi etc. and everything
will become solid or “tied”. The line “sembil
aria vaasi thaakki” is interesting.
Sembu refers to copper as well as pot.
Sembil aria means at half the body, or half of copper. Araivaasi is
half, vaasi also means the combination that was made into the cakra and
burnt. So sembil araivaasi is half of
copper, half of the body- the agni and surya mandala that span the region from
muladhara to the vishuddhi, sembil aria- vaasi thaakki means hit the half with
vaasi. Then it is taken to the silver
which is chandra mandala.
இந்த நுட்பமான பாடலில் அகத்தியர் பல கருத்துக்களைக்
கூறுகிறார். வாசியோகத்தில் சந்திர
மண்டலத்தை அடைவதை இப்பாடல் குறிக்கிறது.
முந்தைய பாடலில் கூறிய பிராணன், மனம், உணர்வு என்ற மூன்றை அமிர்தத்துடன்
கலந்து, வட்டு செய்ய வேண்டும். வட்டு
என்பது தட்டையான சக்கரங்களைக் குறிக்கிறது.
இந்த வட்டை பெரிய தீயில் எரிக்க வேண்டும்.
இங்கு தீ என்பது குண்டலினி அக்னி.
இவ்வாறு எரித்து சாம்பல் பத்து என்கிறார் அகத்தியர். இது அந்த வட்டை சாம்பலாக்கு என்றும் பத்துப் பொருட்களைச்
சாம்பலாக்கு என்றும் பொருள் படும். இங்கு
பத்து என்பவை புலன்களும் அவற்றின் மூலம் பெறப்படும் அனுபவங்களும். இவை சாம்பலானால் அந்த யோகி புலன்களைக் கடந்து
போகிறார். இவ்வாறு பக்தியுடன்
செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.
இவ்வாறு எரிப்பது சட்டியின் நடுவில் நடக்கிறது. சட்டி என்பது உடல், உடல் நடுவே உள்ள
சக்கரங்களில் சுழுமுனை நாடியின் துணையுடன் இந்த வழிமுறை நடத்தப்படுகிறது. அதன் பிறகு அதை தீர்க்கமாக எடுத்து “புத்தியுடன்
செம்பிலரை வாசிதாக்கி” என்கிறார் அகத்தியர். செம்பு என்பது உலோகத்தையும் சொம்பு எனப்படும்
பாத்திரத்தையும் குறிக்கும். இங்கு
பாத்திரம் உடல். செம்பிலரைவாசி என்று
இதைப் பிரித்தால் பாதி உலோகம், உடலில் பாதி என்று இருபொருள்களைத் தருகிறது. உடலில் அரைவாசி என்பது மூலாதாரம் முதல்
விசுத்தி வரை உள்ள அக்னி மற்றும் சூரிய மண்டலத்தைக் குறிக்கும். இதை செம்பில் அரை- வாசி தாக்கி என்றால் உடலின்
பாதியில் வாசியால் தாக்கி என்றும் பொருள் தோன்றுகிறது. வாசியே சக்கரங்களின் ஊடே பயணிகிறது. அதனால் இந்த இரு மண்டலங்களையும் தாக்கி
முடிவில் வெள்ளியில் சந்திர மண்டலத்தில் அதை இடவேண்டும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment