Verse 384
ஆமப்பா காரமுதல் சாரமெல்லாம்
அருமையுள்ள செயநீரால் மெழுகுமாகுங்
காமப்பால் கானற்பால் கசிந்து நின்ற
கருவான செயநீரை யார்தான் காண்பார்
சோமப்பால் கண்டவனே சுருதி காண்பான்
சோர்வன்றி வாதமுறை தானே செய்வான்
நாமப்பா என்ற குறி தன்னை நீயும்
நாதாந்த பூரணமாய் நாடிப்பாரே
Translation:
Yes sir, the
kaaram and saaram
Everything
will become waxy due to the water of victory
The milk of
desire, the milk of fire (mirage)
The oozing,
essence, the water of victory- who will see them
The one who
saw the milk of soma will see sruthi
He will
perform vaadam without tiring out
The sign that
is me (nama)- you
Seek it as the
nadhantha pooranam.
Commentary:
Kaaram and
saaram are the akara and ukara, bindhu and nadha, all the dualities. Agatthiyar says that due to this process they
will all turn waxy. The milk of desire
is consciousness moving through the agni mandala in the region of organ of
reproduction. The kaanal paal or milk of
fire is consciousness moving in the surya mandala. The soma paal or the milk of soma is
consciousness moving through the chandra mandala. When consciousness reaches the chandra
mandala between ajna and vishuddhi then one will see the divine music. Siddhas call this as gitantham. It is rhythm without any distinctions as a
crescendo or diminuendo. Sruthi also means Veda. Thus this refers to Vedanta. This is one of the six termini that Tirumular
described in Tirumandiram. Performing
vaadam is no debating but performing pranayama or regulation of prana. When the yogin reaches this state his prana
surges like a tornedo. It will move without stopping. Agatthiyar says that then one will see “our”
sign. He is referring to the inner fire,
agathee, the sikaara, the supreme state.
He calls this state the nadhantha poornam.
காரம் மற்றும் சாரம் என்றால் அகார உகாரங்கள், விந்து நாதங்கள். இந்த முறையால் அவையனைத்தும் மெழுகாகும்
என்கிறார் அகத்தியர். காமப்பால் என்பது
உணர்வு காம உறுப்புக்கள் இருக்கும் அக்னி மண்டலத்தில் பயணிப்பதையும் கானல் பால்
என்பது அது சூரிய மண்டலத்தில் பயணிப்பதை யும் குறிக்கின்றன. இவையிரண்டையும் கடந்து ஒருவர் சோமப் பால்
எனப்படும் சந்திர மண்டலத்தை அடையவேண்டும். அப்போது ஒருவர் சுருதியைப் பார்ப்பார்
என்கிறார் அகத்தியர். சுருதி என்பதை
சித்தர்கள் கீதாந்தம் என்பார்கள். அது ஒரே
லயத்தில் இருக்கும் ஓசை, பல்லவி, அனுபல்லவி என்பது போன்ற பிரிவுகள் அற்ற ஓசை. சுருதி என்பது வேதத்தையும் குறிக்கும். அதனால் இது வேதாந்தத்தைக் குறிக்கிறது.
திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியுள்ள ஆறுவகை அந்தங்களில் வேதாந்தமும்
ஒன்றும். அவ்வாறு பார்த்த யோகி சோர்வற்று
வாதம் செய்வார் என்கிறார் அகத்தியர்.
இங்கு வாதம் என்பது சொற்போர் அல்ல, பிராணாயாமம். பிராணன் இந்த நிலையில் பெரும் வலுவுடன் அவருள்
பயணிக்கும். இதையே சித்தர்கள் சாகாக்கால்
என்பர். அப்போது ஒருவர் “நாம்” என்ற
குறியைக் காண்பார் என்கிறார் அகத்தியர்.
இது அகத்தியரை, உள்ளுக்குள் உறையும் தீயை, சிகாரத்தைக் குறிக்கலாம். இதுவே நாதாந்த பூரணம் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment