Verse 403
ஒடுங்கி நிராமயமாகிப் பூரண தாரகமாய்
உகமுடிந்த கவனமெல்லா மொருபுறமாய் நீக்கி
இடங்குவிந்து வலமான ஏக பூரணமாய்
எந்தெந்தக் காரியமும் இன்பமுடன் நினைத்தால்
தடங்கலின்றிச் சித்து வெகு சத்தமாய்க் காணுந்
தன்மையுடன் தன்மனதைத் தானறிந்ததாலே
திடங்குவிந்து நிராமயமாய் சின்மய பூரணமாய்
சிவசிவா சிவகரமே சிவமயமாய்க் காணே
Translation:
Abiding,
becoming niramayam, as poorna thaarakam
Removing all
the attention to one side, with the eon ending
As the fully
complete that accumulated at the left and at the right
Any action,
when wished happily
Will occur
without any obstruction- attaining that sitthu, it will appear as great sattham
Because of
knowing one’s own mind
Becoming firm,
as niramaya, chinmaya pooranam
Siva sivaa! See
sivakaram as sivamayam.
Commentary:
Niramaya, as
we saw before, means infalliable, error-free.
Poorna thaarakam- thaarakam means absolutely essential. Poorna thaarakam means the fully complete
essence. All the external attentions are
removed. Idam and valam means ida and pingala nadi. Consciousness
flows through
the middle. The yogin attains karya siddhi
or having all his wishes fulfilled. He
will know his own mind. He will see
everything happening because of siva and everything as embodiment of siva
நிராமயம் என்றால் குற்றமற்று இருத்தல். தூய நிலை. பூரண தாரகம்- தாரகம் என்றால் அத்யாவசியமானது,
சாரம். பூரண தாரகம் என்றால் ஆத்மாவின்
சத்து. இந்த நிலையில் வெளியுலகின் மீது
இருக்கும் கவனம் விலகிவிடுகிறது. இடம்,
வலம் என்றால் இடா பிங்களா நாடிகள்.
அவற்றில் உணர்வு ஓடாமல் சுழுமுனை ஓடுகிறது. இந்த யோகிக்கு அவர் நினைத்த காரியமெல்லாம்
நடக்கும் காரிய சித்தி ஏற்படுகிறது. அவர்
தனது மனதைத் தான் அறிவார். அனைத்தும்
சிவத்தால் நடைபெறுகிறது, அனைத்தும் சிவமே என்பதை அறிவார் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment