Verse 388
பார்க்க வெள்ளி தங்கமாய மாகப் போச்சு
பரஞான சேகரியின் வாசத்தாலே
வேர்க்கையுடன் சிவயோகந் தங்கிப் போச்சு
ஏகாந்த அஷ்டகர்மஞ் சித்தியாச்சு
சேர்க்கையுடன் ஆதார மூல பீடம்
திருவான பீடமதைத் தியானம் பண்ணித்
தீர்க்கமுடன் நீ இருந்து வாசிஏறி
ஜெக தீபமான செயல் தான்தானாமே
Translation:
Then, the
silver becomes golden
Because of
Para jnana kechari’s residence there
Along with
sweat the sivayogam became permanent
The singular,
ashta karma were accomplished
Along with
merging with adhara mula peeta
Contemplating the
sacred peetam
You remain
with the vaasi having ascended
This action
results in the world turning into light/ you become a great effulgence.
Commentary:
This verse
talks about the next step after consciousness reaching the chandra
mandala. Beyond this the actions occur
without any effort on the yogin’s part.
The body then becomes golden- ponnaar meni. Agatthiyar says that this is because of Para
jnana kechari. Supreme wisdom/consiocusness
which is all pervading. This state is
called Thiru. Peetam means dais as well
as status. The soul attains the supreme
status of Thiru. The vasi will be in the
supreme position. This action turns the
world into effulgence- jagat become jyothi. This action results in self
attaining its original state of jyothi.
இந்தப் பாடல் முற்பாடலின் அடுத்த நிலையைக் கூறுகிறது. சந்திர மண்டலத்தைத் தாண்டி நடைபெறும் செயல்கள்
தானாக நடைபெறுபவை. அப்போது வெள்ளி
தங்கமயமாகும் என்கிறார் அகத்தியர். அதாவது
உடல் தங்கமயமாகும் என்கிறார் அவர். இது பர
ஞான கேசரியின் வாசத்தால் ஏற்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த நிலையே திரு எனப்படுகிறது. இது பீடம் அல்லது ஒரு நிலை, ஒரு தகுதி
ஆகும். இந்த நிலையில் வாசி உச்சத்தில்
இருக்கிறது. அப்போது ஜெகம், உலகம்
சோதியாகிறது. அதாவது பலவாக உள்ள உலகம் ஒருமை நிலையான சோதி நிலையை அடைகிறது. இந்த செயல் தான் தானாகும் செயல் ஆத்மா தனது
உண்மையான நிலையான சோதி நிலையை அடையும் செயல் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment