Monday, 9 May 2016

390. Different peeta

Verse 390
ஒப்பென்ற உருசைதனைச் சொல்லக் கேளு
ஓமென்றப் பிரணவமே மூல பீடஞ்
செப்பென்ற பீடமதில் றீங்கார வாலை
சென்றிருந்தாள் அகார மென்ற சிவனார் தானுங்
குப்பென்று தானெழுந்து வாசியாகக்
கொண்டு நின்ற திருவாசி அம்மாவாசி
அப்பென்ற ஆதார அம்மாவாசி
அதையறிந்து சிவயோக அங்கம் பாரே

Translation:
Listen to me talk about the equivalence
The Om, the pranava is the mula peeta
In the copper/the uttered peeta of reenkaara
Vaalai remains and Siva the akaara
Rose greatly as vaasi
The sacred vaasi is the great vaasi (ammaavaasi)
The adhara of ap is ammaavaasi  (the great vaasi)
Knowing it, see it as the part of Siva yogam.

Commentary:
Agatthiyar describes the different daises in the body, the cakra.  The main peeta is the omkara.  It is the peeta of the muladhara.  In the peeta of copper or the uttered peeta the Vaalai, the reenkaara remains.  Akaara or Siva rises from there as the sacred great vaasi.  The next adhara is that of appu or water.  Agatthiyar says this is a component of Siva yogam.


அகத்தியர் உடலில் உள்ள பீடங்களைப் பற்றிப் பேசுகிறார்.  நமது உடலில் உள்ள முக்கியமான பீடம் ஓங்கார பீடம்.  அது மூலாதாரத்தில் உள்ளது.  “செப்பு” என்றால் உலோகம் மற்றும் கூறுவது என்று இரு பொருள் படும்.  இந்த பீடத்தில் றீங்காரத்தால் குறிக்கப்படும் வாலை இருக்கிறாள் என்கிறார் அகத்தியர்.  இங்கு அகாரம் என்ற சிவனார் குப்பென்று எழுந்து வாசியாகிறார்.  இதுவே திருவாசி அல்லது அம்மாவாசி.  இதனை அடுத்து இருக்கும் பீடம் அப்புப்பீடம் அல்லது நீர்த்தத்துவம் இருக்கும் பீடம்.  இவை சிவயோகத்தின் அங்கங்கள் என்கிறார் அகத்தியர்.  இதையறிந்து ஒருவர் சிவயோகத்தைப் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment