Verse 383
காணவே சந்திரனில் வைத்துப் பாரு
கசிந்து மிகத் தானூறிக் கெங்கையாச்சு
தோணவே கெங்கைஎன்ற செயநீர் தன்னை
சுத்தமுள்ள பீங்கானில் வடித்து வைத்துப்
பேணவே சரக்குகளில் சுருக்குத் தாக்கப்
பேசாமற் தானடங்கிக் கட்டிப் போகும்
ஊணவே உபரசங்கள் நீறிப் போகும்
உருமையுள்ள சத்துவகை மெழுகுமாமே
Translation:
Place it in
the moon and see it
Oozing by
itself it became ganga
The ganga the
water of victory
Collect it in
the porcelain
To attack the
products, quickly
Everything will
abide and solidify
When planted
the associated essence will become liquid
It will become
the wax.
Commentary:
The amrit that
secretes because of the yoga is the true ganga.
It is the jaya neer or water of victory.
It is collected at the porcelain or the ajna. Then, it is drawn down to the other cakras. The sarakku may refer to rasa which ends in
semen. It will solidify and become like
a wax.
வாசி யோகத்தினால் சுரக்கும் அமிர்தமே கங்கை என்கிறார்
அகத்தியர். முந்தைய பாடலில் சந்திரனில்
இட்டுப் பார்க்குமாறு கூறிய அவர் இதுவே ஜெய நீர் என்றும் இதை பீங்கானில் சேகரிக்க
வேண்டும் என்றும் கூறுகிறார். பீங்கான் என்பது ஆக்ஞை சக்கரமாக இருக்கலாம். இவ்வாறு சேகரித்த அமிர்தத்தைப் பிற
சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அப்போது சரக்கு எல்லாம் கட்டிப்போகும் என்கிறார் அவர். சரக்கு என்பது ரசம் முதலான தாதுக்களாக
இருக்கலாம். இந்த தாதுக்களே முடிவில்
விந்துவாகின்றன. இந்த விந்து அமிர்தத்தினால்
கட்டிப் போகும் என்றும் மெழுகுபோல் ஆகும் என்றும் கூறுகிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment