Saturday, 14 May 2016

396. Receive the nectar with grace, pray to Thiru

Verse 396
தானென்ற மடபதிதான் தான்தானாகித்
தன்மையுடன் பூரணத்தில் சாற்றக் கேளு
வானென்ற வடிவுடைய அண்டந் தன்னில்
மகத்தான அமுர்தரச போதந்தன்னைக்
கோனென்ற குருவருளால் தானே வாங்கி
குறியான சத்தி சிவநாதங்கூட்டித்
தேனென்ற கற்பூர தீபங்காட்டி
திருவான பதிநோக்கி பூசை பண்ணே

Translation:
The self, madapathi becomes distinct
Merging with the poornam, listen
The universe whose form is that of the sky
The amrita rasa bodham
Due to kon, the grace of guru, receiving it
Merging the sakthi, sivam and andham
Waving the flame of camphor
Perform worship towards the pathi the thiru.

Commentary:
Agatthiyar mentioned in the previous verse that madapathi will end.  Here he says that it will become one with the poornam or consciousness.  Then the divine nectar the bodham will be available in the space, the universe.  This is the dvadasantha.  This nectar is received by guru’s grace.  Sakthi, Sivam and nadha are merged with the flame of camphor or the vaalai which appears as this flame.  Thiru is the supreme state, the ultimate locus, pathi.  This state is called the maha kaarana sareera.  It is called sikaara.


முந்தைய பாடலில் அகத்தியர் மடபதி முடிவுறும் என்றார்.  இப்பாடலில் மடபதி பூரணத்தை சாரும் என்றும் வெளியான அண்டத்தில் இருக்கும் அமிர்தமான போதத்தை குருவின் அருளால் பெறவேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அமிர்தம் இருக்கும் இடமே துவாதசாந்தம்.  அதன் பிறகு சக்தி, சிவம் நாதம் ஆகிய மூன்றையும் கற்பூர தீபம் காட்டி ஒன்றாக்க வேண்டும் என்கிறார் அவர்.  கற்பூர தீபம் என்பது வாலை.  உடலில் இருக்கும் பிராணன், மனம், உணர்வு என்ற மூன்றும் ஒன்றாக இருக்கும் நிலை.  இந்த வாழை கற்பூர தீபம் போல புகையைப் போலக் காட்சியளிக்கும்.  இந்த நிலைக்குப் பிறகு திரு என்னும் பத்தியை வணங்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதுவே உச்ச நிலை, மகாகாரண சரீரம்.  இதுவே சிகாரம் எனப்படுகிறது.

No comments:

Post a Comment