Verse 34
கேளப்பா வித்தியா தத்துவத்தைச் சொல்வேன்
கேள் என்ன காலை என்றும் நியதி என்றும்
சூளப்பா கலைஎன்றும் வித்தை என்றுஞ்
சுகமான ராகம் என்றும் புருடன் என்றும்
நாளப்பா மாய்கை என்றும் எழுமாச்சு
நன்மையுடன் வித்தியா தத்துவத்தைப் பார்த்து
ஆளப்பா ஆதாரத் தேகந் தன்னை
அறிந்து கொண்டு சிவ தத்துவத்தைக் கேளே
Translation:
Listen son, I
will tell you the vidya tattva
Listen,
kaalai, niyathu
Kalai, vidyai
and
The blissful
raga and purusha
The maya and
so they became seven.
Seeing the
beneficial vidya tattva
Rule it, the
supporting body
Knowing it,
listen about siva tattva.
Commentary:
Agatthiyar is
listing the vidya tattva. They are
kaala, niyathi, kalaa, vidya, purusha and maya.
Maya mentioned here is the asuddha maya which creates the other
principles. However, it is also
considered a tattva as the creations of maya are beyond the five, kalaa, kaala,
niyathi, raga and vidya. The vidya here
is asuddha vidya which gives the perception of limitation. Purusha is not atma, the self. Purusha is a product of the vidya tattva, it
is a state. It is the state of the soul
that is limited by the vidya tattva and takes a body.
Instead of
saying kaala Agatthiyar is saying kaalai or morning. This is to indicate that it is the distinctions
of time, morning, evening, day, month etc.
Kalaa is
limitations with respect to action., kaala- limitations with respect to time, raga-
limitations in what the soul can desire, niyathi- limitation in experience.
Agatthiyar is
proceeding to the Siva tattva after the vidya tattva.
அகத்தியர் இப்பாடலில் வித்யா தத்துவங்களை
விளக்குகிறார். தத்துவம் என்பது
தன்னிலிருந்து மற்றொன்றைப் பிறப்பிப்பது.
அதனால்தான் ஆத்ம தத்துவம் என்பவை ஆத்மா அல்ல. ஆத்மா என்றும் நிலையாக இருப்பது, தன்னிலிருந்து
மற்றொரு தத்துவத்தைப் பிறப்பிப்பதில்லை. புருடன்
என்று வித்தியா தத்துவத்தில் குறிப்பிடப்படுவது ஆத்மா அல்ல. அது வித்யா தத்துவத்தால் மாயையினால் உருவாக்கப்படும்
ஒரு நிலை. அதேபோல் வித்தியா தத்துவத்தில்
சேர்க்கப்படும் மாயை சுத்த மாயை அல்ல.
மற்ற தத்துவங்களான காலம்- பகல், இரவு, நாள், மாலை, காலை
என்று காலத்தின் அளவுக்குட்பட்டமையை ஏற்படுத்துவது. கலை- செயல்பாட்டில் அளவுக்குட்டமையை
ஏற்படுத்துவது, ராகம்- விருப்பத்தில் அளவுக்கு உட்பட்டமைக்குக் காரணம்,
நியதி- அனுபவத்தில் அளவுக்குட்பட்டமையை
ஏற்படுத்துவது, வித்யை- அறிவில் அளவுக்கு உட்பட்டிருப்பதை ஏற்படுத்துவது.
இவ்வாறு வித்தியா தத்துவத்தை விளக்கியபிறகு அகத்தியர் சிவ
தத்துவங்களை விளக்கப்போகிறார்.
Can you please send brief explanation of these seven vidhya thatvas in Tami by pdf
ReplyDeleteCan you please send me the sevan vithya thatvas brief explanation of Tamil pdf
ReplyDelete