Sunday, 1 February 2015

11. saumya sagaram has details about all principles, deeksha marga

Verse 11
ஆளென்று சொன்ன தபோ தனரைப்பார்த்து
ஆதி தொடுத்து அந்தம் வரை சொன்னோம் நூலில்
காலென்ற கருக்குருவும் நன்றாய்ச் சொன்னோம்
காசினியில் தபோதனர்கள் கருணையாக
வாளென்று சொன்னதொரு தீக்ஷை மார்க்கம்
வளமான சவுக்கார வழலை போக்கும்
மேலென்ற காப்பதிலே ஆறுலக்ஷம்
விண்டதிலே சூக்ஷமதாய்க் கண்டோம் பாரே

Translation:
Looking at the saints who requested, “Rule us”
We described from the beginning to the end in the book
We described the “karukkuru” (guru of the womb), the breath
The saints in world, becoming happy
The deeksha marga called the sword
Will remove the “savukkaara vazhalai”
In the superior “kaappu” protection, the six lakhs
Uttered, we saw it to be the subtly

Commentary:
Agatthiyar composed the saumya sagaram following the request of the saints.  He revealed all the principles from the beginning to the end.  He taught them about prana or air principle that resides in the muladhara.  It is called the “karukkuru” or the “guru of the womb”.  He also taught them the deeksha marga or the esoteric steps that one can go through following initiation and becoming an expert in a particular step. This deeksha marga will remove the “vazhalai”.  There are several interpretations for this term vazhalai.  As usual, this Siddha word can be interpreted in both philosophical as well as medical terms.  Some opine that it refers to the phlegm in the body and these austerities will remove it.  Some opine that it refers to the fluid in the womb or “poo neer” or “water of the earth”, the earth being the womb.  Some others explain this as the state before becoming singularity.  The deeksha marga will remove the distinctions and make the soul reach the state of singularity.  The expression “mel enra kaappathile” may mean the Sanskrit work that he received from Siva. May be it had six lakh slokas.  The saumya sagaram gives the essence of these six lakh slokas.

தபோதனர்களின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து அகத்தியர் சௌமிய சாகரத்தை இயற்றினார்.  அதில் ஆதி முதல் அந்தம் வரை உள்ள விஷயங்களை விளக்கியுள்ளார்.  குருக்கரு அல்லது கால் எனப்படும் பிராணனைப் பற்றியும் அதில் விளக்கியுள்ளார்.  அதனுடன் தீக்ஷை மார்க்கம் எனப்படும் சித்த மார்க்கத்தையும் கூறினார்.  அது “சவுக்கார வழலையை” விலக்கும் என்றும் கூறுகிறார். 

வழலை என்ற சித்தர் பரிபாஷை பல விஷயங்களைக் குறிக்கும்.  சிலர் அது கோழை என்பர், சிலர் அது பூ நீர் என்பர்.  பூ நீர் என்பது பூமியின் நீர் அல்லது கருவறையில் உள்ள நீர் என்றும் பொருள்படும்.  மற்றும் சிலர் இது பரநிலைக்கு முற்பட்ட நிலை என்பர்.  தீக்ஷை மார்க்கம் இந்த வழளையைப் போக்கும் என்கிறார் அகத்தியர். இதனை அடுத்து மேல் என்ற காப்பதிலே என்று அகத்தியர் குறிப்பிடுவது அவர் முன்பு சிவனிடமிருந்து பெற்ற சம்ஸ்கிருத நூலைக் குறிக்கலாம்.  அதில் இருந்த ஆறு லக்ஷம் சுலோகங்களின் சூட்சுமமே சௌமிய சாகரம் என்று இதற்குப் பொருள் கூறலாம்.  

No comments:

Post a Comment