Verse 24
பாரப்பா
ஆதாரம் ஆறாதாரம்
பரிவான
ஆதார மடத்துக்குள்ளே
நேரப்பா
அக்கினிதான் ஜீவாத்மாவே
நிறைந்துநின்ற
வாய்வதுதான் பரமாத்மாவாய்ப்
பேரப்பா
பெருகி நின்ற கடத்தினுள்ளே
பிளமாக
நின்று திருவிளையாட்டாடி
காரப்பா
ஆகாசஞ் சாக்ஷியான
கருணையுடன்
நின்றுதடா கருவாய்க்காணே
Translation:
See son, the adhara the six of them
Within the merciful center that has the adhara
The fire is the jeevatma
The air principle that remains filling that is the
Paramatma
With the pot where these are flowing in great amount
Remaining in the cave, the sacred one plays
See son, the akasa is the witness
It remained mercifully, see it as the essence.
Commentary:
In this very important verse Agatthiyar describes what is
Jivatma and what is Paramatma. The
adhara or the support are the six cakra.
The maTam or center that holds these six centers is the human body. Within the body the fire principle is the
Jiva and the air principle is Paramatma.
The body is the pot that holds all these. The cave in this pot is the
heart where the sacred Divine remains playing.
The sky or the space principle is the witness for this. It is interesting to call the sky or space as the
witness. Space is present
everywhere. Even in places where the other
principles do not exist, space exists.
Thus, it forms the substratum in which everything remains.
மிக
முக்கியமான இப்பாடலில் அகத்தியர் ஜீவாத்மா பரமாத்மா உடல் ஆகியவற்றைப் பற்றி
விளக்குகிறார். அனைத்துக்கும் ஆதாரமாக
இருப்பவை சக்கரங்கள். ஆதாரம் என்றால்
தாங்குவது, support. சக்கரங்கள் உடலுக்கும் தத்துவங்களுக்கும்
ஆதாரமாக இருக்கின்றன. இந்த ஆதாரங்கள் இருக்கும்
மடம் உடலாகும். அந்த மடத்தில் அக்னி
தத்துவமே ஜீவாத்மா. அந்த மடத்தை
நிறைக்கும் வாயுவே பரமாத்மா. இந்த
பரமாத்மா குகை அல்லது பிலம் எனப்படும் இதயத்தில் இருந்து விளையாடுகிறது. வாழ்க்கையே அதன் விளையாட்டுதான். இந்த கடம் அல்லது பானையில் ஆகாயம் சாட்சியாக
இருக்கிறது.
ஆகாயத்தை
சாட்சி என்று கூறுவது மிகவும் ரசமானது. பஞ்ச
தத்துவங்களில் ஆகாய தத்துவமே அனைத்துக்கும் அடிப்படையாக இருந்து தாங்குகிறது. பிற தத்துவங்கள் அதன் மீது உள்ளன. ஒரு இடத்தில் மற்ற எந்த தத்துவம்
இல்லாவிட்டாலும் ஆகாய தத்துவம் இருக்கிறது.
அதனால் அதுவே அனைத்துக்கும் சாட்சியாக உள்ளது.
No comments:
Post a Comment