Verse 25
காணப்பா தத்துவத்தின் விபரஞ் சொல்வேன்
கருணையுடன் சொல்லுகிறேன் கனிவாய்க்கேளு
பேணப்பா பூதமைந்து சொல்லக் கேளு
பிரிதிவி அப்புவுடன் தேய்வுமாக
பூணப்பா வாய்வுடனே ஆகாசந்தான்
பொருந்திநின்ற பூதமடா ஐந்துமாச்சு
தோணப்பா மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்துத்
துலங்கி நின்ற பூதத்தை நன்றாய்க்காரே
Translation:
See son, I will tell you details about the principles
I will tell
you with mercy, hear with compassion
Hear me tell
you about the five elements
Earth, water,
effulgence
The air along
with sky
Thus, the
elements that remain fitting well are five
Seeing this
well with the mind’s eye
You realize
the elements that remain so.
Commentary:
After
describing that Jivatma and Paramatma are fire and air principles, Agatthiyar
begins describe the five elements that constitute the body and other factors
that make up a lifeform.
The five
elements are earth, water, fire, air and space.
The different cakras represents these five elements as follows: The muladhara corresponds to the earth principle,
the svadishtana the water principle, the manipuraka the fire principle, the
anahata the air principle and vishuddhi the space principle.
ஜீவாத்மா அக்னி
பரமாத்மா வாயு என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் ஐம்பூதங்களை
விளக்கத்தொடங்குகிறார். ஐம்பூதங்களாவன
பிரிதிவி எனப்படும் நிலம், அப்பு எனப்படும் நீர், தேயு எனப்படும் தீ, வாயு எனப்படும்
காற்று மற்றும் ஆகாயம். நமது உடலில் உள்ள
சக்கரங்களுக்கும் இந்த பூதங்களுக்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு: மூலாதாரம்-நிலம், சுவாதிஷ்டானம்-நீர்,
மணிபூரம்- தீ, அனாகதம்- வாயும் விசுத்தி- ஆகாயம்.
No comments:
Post a Comment