Saturday 13 June 2015

91. Charya, Temples and Rivers one has to bathe in and worship

Verse 91
சரியை, கிரியை, யோகம், ஞானம்

காணுதற்கு சரியைவழி என்னவென்றாற்
கருணையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
பூணுதற்கு நவ்வெழுத்தின் மேலே மைந்தா
புகழான மவ்வேழுத்தால் சிகராந் தோணும்
பேணுதற்கு மவ்வெழுத்தின் மேலே சென்று
பிலமான அவ்வெழுத்தின் கீழதாகத்
தோணுதற்கு சிவாலயமும் நதியுமுண்டு
சுத்தமுடன் அந்திடத்தில் கண்டு தேரே

Translation:
Charya, Kriya, yoga and Jnana

If (you) ask about the path of charya
The merciful Pulatthiya!  Listen to me,
Above the letter “navvu”
The glorious “sikaara” will emerge by the letter “mavvu”
Going above the letter “mavvu”
Below the locus of that letter
There are temples of Siva and rivers
Seeing that place with purity and realize.

Commentary:
 In this first verse on the four step pathway of charya, kriya, yoga and jnana Agatthiyar is explaining charya.  Charya is external discipling.  It involves going to temples, performing worship rituals etc.  These are external rituals.  In the siddha marga an external ritual has an internal component.  Agatthiyar describes what is a temple and what is sacred water body in this verse.

Siddhas and other tantric systems assign bija akshara or seed letters to the cakras.  These letters correspond to different principles.  They also serve as mantra to invoke certain mental and spiritual states.  Please refer to the verses in Agatthiyar meijnana kaviyam verses 88 onwards.  (www.scribd.com or http://agatthiyarjnanam.blogspot.in/) where these are explained in detail.

Agatthiyar describes the terrain from muladhara to manipuraka in terms of the letters assigned to these loci.  The letter for the muladhara cakra is“na” and the letter for svadishtana is “ma” while the letter for manipuraka is “ci”.   Agattthiyar tells Pulatthiyar that between below the letter “ma” there are Siva temples and sacred waters and one should worship them.  Between the muladhara and svadishtana is the kanda moolam, the site from which the nadis emerge.  This place is called Pothigai in the Siddha parlance.  Agatthiyar described the location of Brahma in the previous verse (verse 59) as that below the svadishtana.  This locus is between the two cakras and the best way to describe it is to say that it is below makaara and nakaara. 

From this verse we understand why the Siddhas deplore running to different temples and sacred water bodies while they are all within us.  Please recall Sivavaakiyar verse “what is a temple what is a sacred tank” (verse 34) here. 

சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு படி வழியில் அகத்தியர் இப்பாடலிலிருந்து சரியையை விளக்கத் தொடங்குகிறார்.  சரியை என்பது புற ஒழுக்கங்கள்.  அவை கோயிலுக்குப் போவது, புனித தீர்த்தங்களை நாடுவது, பூத்தொடுப்பது போன்ற சேவைகளைச் செய்வது ஆகியவை.  இவையனைத்தும் புறச் செயல்கள்.  சித்த மார்க்கத்தில் இந்த புறச்செயல்களுக்கு அவற்றுடன் தொடர்புடைய அகச்செயல் உள்ளது.  அதாவது, புறச்செயல்கள் அகச்செயல்களை நினைவுபடுத்தவே செய்யப்படுகின்றன என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இப்பாடலில் அகத்தியர் கோயில் என்றால் என்ன தீர்த்தங்கள் என்றால் என்ன என்று கூறுகிறார்.

சித்த மார்க்கத்திலும் தந்திர மார்க்கத்திலும் சக்கரங்கள் ஒரு பீஜ எழுத்தால் குறிக்கப்படுகின்றன.  இந்த எழுத்துக்கள் ஒரு தத்துவத்தைக் குறிக்கின்றன, மந்திரமாக செபத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன.  இந்த எழுத்துக்களைப் பற்றிய விவரங்கள் அகத்தியர் மெய்ஞ்ஞானத்தில் விளக்கப்பட்டுள்ளதைக் காண்க ((www.scribd.com or http://agatthiyarjnanam.blogspot.in/)

அகத்தியர் இப்பாடலில் சக்கரங்கள் என்ற நிலப்பரப்பை பீஜ அட்சரங்களின் மூலம் விளக்குகிறார்.  மூலாதாரத்தின் எழுத்து நகாரம் அல்லது நவ்வு.  அதற்கு மேல் இருக்கும் சுவாதிஷ்டானத்தின் எழுத்து மகாரம் அல்லது மவ்வு.  அதற்கு மேல் இருக்கும் மனிபூரகத்தின் எழுத்து சிகாரம்.  மூலாதாரத்துக்கு மேல் சுவாதிஷ்டானத்துக்குக் கீழ் உள்ள இடத்தை இப்பாடலில் குறிப்பிடும் அகத்தியர் அந்த இடத்தில் பல சிவாலயங்கள் இருக்கின்றன நதிகள் இருக்கின்றன என்கிறார்.  நதிகள் என்பது நாடிகளைக் குறிக்கும்.  ஆலயங்கள் அவை தோன்றும் இடமான கண்ட மூலத்தைக் குறிக்கும்.  கண்டமூலத்தில் முக்கியமான நாடிகள் தோன்றுகின்றன.  கண்டமூலம் ஒரு ஆமையைப் போல வரையப்படுகிறது.  கோவில்களில் துவஜஸ்தம்பத்தின் கீழே ஒரு ஆமை இருக்கும்.  அதன் முதுகின்மேல் துவஜஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கும்.  அதில் பல நிலைகள் குறிக்கப்பட்டிருக்கும்.  ஆமை என்பது கண்ட மூலத்தையும் துவஜஸ்தம்பம் தண்டுவடத்தையும் அதில் உள்ள நிலைகள் சக்கரங்கள் சக்தி நிலைகளையும் குறிக்கும்.   கண்ட மூலத்திலிருந்து ஓடும் முக்கிய நாடிகளிலிருந்து பிற துணை நாடிகள் பிரிகின்றன.   இவற்றைத்தான் அகத்தியர் சிவாலயங்கள் என்கிறார்.   


வெளியில் உள்ள கோயில்களுக்கும் குளங்களுக்கும் தொடர்புடைய கோவில்களும் குளங்களும் நம்முள் இருக்கின்றன என்பது இதிலிருந்து புரிகிறது.  சித்தர்கள் ஏன் கோயில்களையும் குளங்களையும் நாடி ஓடுவதை கண்டிக்கின்றனர் என்பது இதிலிருந்து புரிகிறது.  சிவவாக்கியரின் “கோயிலாவது ஏதடா, குளங்களாவது ஏதடா” என்ற பாட்டை இங்கே நினைவு கூரவும் (பாடல் 36).

No comments:

Post a Comment