Saturday 6 June 2015

84. Origin of vaasi

Verse 84

கண்ணைப் பார் மனக்கண்ணால் தன்னைப் பாரு
கமலமென்ற சுழினையுட காலைப் பாரு
விண்ணைப் பார் காலறிந்து உன்னைப் பாரு
வேதமயமான சிவ யோகம் பாரு
பெண்ணைப் பார்த்தலையாதே தன்னைப் பாரு
பெலமான வாசி திருமூலம் பாரு
தன்னைப் பார் தன்னிலையே வாசி மூலஞ்
சதா மூலமானதே  சரிதான் பாரே

Translation:
See the eye, see Self through the mental eye
See the whorl, the lotus and the prana there/its feet
See the sky, knowing about the prana/feet look at yourself
See the Sivayoga, the embodiment of knowledge/Veda
Do not roam around admiring women, see Self
See the vaasi, the locus, the sacred origin
See Self, the status of the Self is the origin of vaasi
The eternal origin, see the right one.

Commentary:
This verse has an important information about vaasi or life force.  Agatthiyar tells Pulattiyar to see various sites in this verse.  First, he tells Pulatthiyar to look at Self or atma through mind’s eye.  Then he tells him to see the space, this must be the internal space or pinda akasam, the prana or the foot from where the ascent towards unlimitedness occurs.  This locus is “suzhinai” or ajna.  He says that this is Sivayoga or the state of union with Supreme consciousness. 
Next comes the message about vaasi.  Agatthiyar says that the origin of vaasi or life force is Self.  The state of Self or “thannilai” is the origin of everything including the life force.  Agatthiyar tells Pulatthiyar to perceive these truths.


இப்பாடலில் அகத்தியர் வாசி அல்லது உயிர்ச்சக்தியைப் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். அவர் முதலில் புலத்தியர் தன்னை அதாவது ஆத்மாவை மனக்கண்ணால் பார்க்கவேண்டும்.  பின் விண் அல்லது பிண்டாகாசத்தைப் பார்க்கவேண்டும்.  அதனை அடுத்து தாமரை மலரான சுழினை அல்லது ஆக்ஞையையும் அங்கு கால் எனப்படும் பிராணனைப் பார்க்கவேண்டும் என்கிறார்.  கால் என்பது இங்கு பிராணனைக் குறித்தாலும் அது உயருணர்வு நிலை என்பதன் பாதம் என்றும் பொருள்படுகிறது.  இங்கிருந்துதான் ஆத்மா சிவ நிலையையும் பரநிலையையும் அடைகின்றது. இவ்வாறு சுழினையில் இவற்றைப் பார்த்திருக்கும் நிலையே சிவயோகம் அல்லது பரவுணர்வுடன் கூடியிருக்கும் நிலை.  இந்த நிலையே வாசியின் மூலம் என்கிறார் அகத்தியர்.  தன்னிலை அல்லது ஆத்மா இவ்வாறு சுழினையில் சிவயோகத்தில் இருக்கும் நிலையே வாசியின் மூலம்.  அதுமட்டுமல்ல அதுவே அனைத்துக்கும் மூலம்.  இதைச் சரியாகப் பார்க்குமாறு அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

No comments:

Post a Comment