Friday 5 June 2015

83. Benefits that a yogi performing Shanmukha dhyanam can confer

Verse 83
பாரப்பா சுடரொளியைக் கண்ணால் தூண்டி
பதிவான கடைக்கண்ணால் நடுக்கண்ணைப் பார்க்க
நேரப்பா நடுநிலையைக் கண்ணாற்பார்க்க
நின்ரூபஞ் சோதிமயமாகத் தோணும்
தேரப்பா மனதறிவால் விபூதி வாங்கி
திருவான பதி நோக்கித் தியானம் பண்ணி
காரப்பா உலகோர்க்கு கடாக்ஷித்தாலே
கருமவினை தீருமடா கண்ணைப் பாரே

Translation:
See son, by increasing the flame of the lamp
If the middle eye is seen with the side of the eye
If the middle state is seen with the eye
Your form will appear as an embodiment of brilliance
With the mind and consciousness in unison, if the sacred ash is taken
Contemplating on the auspicious site
If you give it to the people
The effects of their karma will be nullified, see the eye.

Commentary:
Agatthiyar is following his pattern of describing the worship method in the first verse, mentioning the personal benefit due to the practice and the benefit that the yogi can confer upon others due to the practice.  In the third verse in the Shanmukha dhyanam series he is revealing the benefit that others can derive from the yogi’s practice.  When the yogi increases the flame within and sees the middle eye, the one on the forehead, with the edge of the eye, he will see his form as that of effulgence.  While focusing the mind and consciousness in this state and locus, if he gives sacred ash to people, all the effects of their karma will leave them.
Through these practices Agatthiyar shows us that the kundalini yoga not only benefits the one performing it but also everyone who comes in contact with the yogi.

பல்வேறு விதமான தியானங்களை விளக்கும் அகத்தியர் ஒரு முறையைக் கையாண்டுள்ளார்.  மூன்று பாடல்களால் ஒரு தியானம் விளக்கப்பட்டிருக்கிறது.  அதில் முதல் பாடல் தியான முறையையும் இரண்டாவது பாடல் அந்த தியானத்தைச் செய்பவர் பெரும் பலனையும் மூன்றாவது பாடல் அதனால் பிறர் பெரும் நன்மையையும் விளக்குகிறது.  இவ்விதத்தில் சண்முக தியாத்தை விளக்கும் இப்பாடலில் அகத்தியர் அந்த யோகி பிறருக்குச் செய்யக்கூடிய நன்மையைக் கூறுகிறார்.  சண்முக தியானத்தை மேற்கொள்ளும் யோகி “அந்தர் ஜோதி” எனப்படும் உள்ளொளியைத் தூண்டி நடுக்கண்ணை ஓரக்கண்ணால் பார்த்தால் தனது உருவத்தை சோதிமயமானதாகக் காண்பார்.  அந்த நிலையையும் பதி எனப்படும் இடத்தையும் மனத்தாலும் அறிவாலும் நினைத்தபடி அவர் பிறருக்கு விபூதி அளித்தால் பிறரது கர்ம வினைகள் அவர்களைவிட்டு நீங்கிவிடும் என்கிறார் அகத்தியர்.

இதனால் நாம் புரிந்துகொள்வது என்னவென்றால் குண்டலினி யோகம் என்பது பயிற்சி செய்பவருக்கு மட்டுமின்றி உலகோர் அனைவருக்கும் பலனளிக்கக் கூடியது என்பதையே.

No comments:

Post a Comment