Sunday, 21 February 2016

325. Abidance of light and space

Verse 325
 காணப்பா இருளதினால் ஒளிவுதான் தோன்றும்
கருவான ஒளியதினால் வெளிதான் தோற்றும்
பேணப்பா வெளியொளியும் எதனாலாச்சு
பெருகி நின்ற இருளதிலே உண்டாச்சப்பா
ஊணப்பா தானொடுங்கும் வகையைக் கேளு
உத்தமனே வெளியதுவும் ஒளியாய்ச் சேரும்
பூணப்பா ஒளியதுவும் இருளில் சேரும்
புத்தியுடன் கண்டறிவாய்த் தன்னுள்தானே

Translation:
See son, because of darkness concealment occurs
Due to the essence, light, space is revealed
Now think, what caused the emergence of light and space
They occurred due to/from the darkness
Plant this (idea) firmly. Now listen about the method of abidance
The supreme one!  The space joins the light
The light joins the darkness.
See these with buddi/discrimination, within you.

Commentary:
This is an important verse that needs contemplation.  Let us understand these concepts with an example.  Let us consider a light source and an object.  When the light is on, it reveals the object, its presence, its qualities.  Thus, the nature of the object is that which light reveals. We all know that an object may look as two entirely different things depending on the light source. Thus, what is known about an object depends on the light source, and it may or may not be the true nature of the object. The object has a true existence in the darkness which is absence of light. The light and space came from darkness which is the original entity.  One has to think about this carefully and understand within oneself.

Now the question why does Agatthiyar call the supreme state as darkness while Kashmir Saivam calls it prakasha, arises.  This also needs thinking.  In the presence of very bright light even objects that have light appear dark.  This is similar to stars disappearing when the sun is up, even though they have their own light.  Thus darkness and light are the same in that both conceal. 

இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறார்.  இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முயலுவோம்.  ஒளி என்பது இருக்கும்போது பொருள்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன.  அவை இத்தகைய தன்மையை உடையவை என்று ஒளியே காட்டிக்கொடுக்கிறது.  ஒளியின் நிலையைப் பொருத்து பொருள்களின் தோற்றமும் மாறுபடுகிறது.  ஒளிதரும் விளக்கை மாற்றி வைத்தால் ஒன்றாகத் தெரியும் பொருள் மற்றொன்றாகத் தெரிகிறது.  இவ்வாறு விளக்கினால் காட்டப்படும் பொருள் அதன் உண்மையான தன்மையுடன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.  ஆனால் அவை உண்மையான இருப்பைப் பெற்றுள்ளன, இந்த நிலை இருட்டில், அறிவின் பாதிப்பு நீங்கிய நிலையில், இருக்கிறது. அதனால் ஒளியும் அதனால் காட்டப்படும் வெளியும் இருளில் ஒடுங்குகின்றன.


அகத்தியர் உச்ச நிலை இருள் என்கிறாரே காஷ்மீர சைவம் அதை பிரகாசம் என்கிறதே என்ற கேள்வி இப்போது நமக்குள் எழுகிறது.  இதையும் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.  மிகப் பிரகாசமான ஒரு ஒளி இருக்கும்போது அதன் அருகில் இருக்கும் பொருள்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.  சூரியன் வானில் இருக்கும்போது நட்சத்திரங்கள் இருளடிக்கப்படுகின்றன.  இவ்வாறு பிரகாசம் இருளை ஏற்படுத்துகிறது.  இவ்வாறு அகத்தியர் கூறும் இருளும் காஷ்மீர சைவம் கூறும் பிரகாசமும் ஒன்றாகின்றன.  இதை ஒருவர் புத்தியினால் சிந்தித்து அறியலாம்.

No comments:

Post a Comment