Verse 306
இருந்துகொண்டு மயேசுரனைத் தியானம் பண்ணி
இருள்கண்ட வெளிபோலே இன்பங் கொண்டு
வருந்தி நின்ற குண்டலமுங் கிரீடஞ்சாற்றி
மகத்தான மயேஸ்வரியை வாமம் வைத்து
சொரிந்த முர்தம் பூரணமாய் போதங்கொண்டு
சுகசீவ பிராண கலை சுத்தமாக
அருந்தலமா இருதயத்தில் நினைக்க மைந்தா
அப்பனே மயேஸ்வரனார் தியானங்காணே
Translation:
Remaining so, contemplating on Maheswara
Attaining bliss like the space that experienced darkness
Adorning earrings and crown
Placing Maheswari on the left
With the nectar flowing, consuming awareness (bodham)
With the sukha jeeva prana kala attaining purity
Son, thinking about this in the heart
Son, see Maheswara dhyana.
Commentary:
This dhyana is at the anahata cakra. Maheswara and his consort Maheswari are the atidevata here. The state experienced here is at the soul level. Agatthiyar mentions this as Jiva prana kalai. The divine nectar of secretion from lalata flows down. The sukha jiva prana kalai gets purified here.
இப்பாடல் அனாகத சக்கரத்தின் அதிபதியான மகேஸ்வரனின் தியானம். இது ஜீவநிலையில் ஏற்படுகிறது. அதையே அகத்தியர் சுக சீவ பிராண கலை தூய்மையடைகிறது என்கிறார். இந்த நிலையில் லலாடத்திலிருந்து அமிர்தம் ஊறத் தொடங்குகிறது.
No comments:
Post a Comment