Tuesday, 16 February 2016

308. Dhyana of the three mandala

Verse 308
பாரப்பா இப்படியே ஆறுவகைத்தியானம்
பதிவான மண்டலத்தில் மூன்று வகைத் தியானம்
நேரப்பா தானிருந்து உபாசிப்பார்கள்
நேர்மையுள்ள தேவாதி தியான மாச்சு
வேரப்பா விஸ்வ மென்ற தியானஞ் சொல்வேன்
விளங்கி நின்ற பிரபஞ்சந் தான் தானென்று
காரப்பா அகண்டவெளி ரூபமாக
கருணையெனத் தானிருக்கத் தியானமாச்சே

Translation:
See son, the six types of dhyana
Three dhyana in the mandala of three
They will worship so
They became the dhyana of Deva
Next I will tell you a different one, the dhyana of visvam (universe)
With Self as the universe
As the form of unlimited eternal space
Remaining so is that dhyana.

In the previous verses Agatthiyar described dhyana of deities from Brahma to Sadasiva,  They are deities with a form.  Now he is describing a different type of dhyana, that of the three mandala, namely agni, surya and Chandra mandala.  Agni mandala spans the region between muladhara, svadhishtana and manipuraka.  Surya mandala comprises anahata and vishuddhi.  Chandra mandala is the region containing ajna and sahasrara.  The space beyond them is the dvadasantha.  This space is described in the next verse.  Here he talks about the dhyana of the three mandala.


முந்தைய பாடல்களில் அகத்தியர் உருவதியானத்தை விளக்கினார்.  பிரம்மா முதல் சதாசிவன் வரை தெய்வங்கள் ஒரு உருவில் தியானிக்கப்பட்டன.  அதற்கு மேல் இருப்பது அருவ தியானம்.  இதில் ஆத்மா, அகண்ட வெளி ரூபத்தில் இருப்பதாக தியானிக்கப்படுகிறது.  இந்த தியானம் மூன்று மண்டலங்களில் செய்யப்படுவதாக அகத்தியர் குறிப்பிடுகிறார்.  மூன்று மண்டலங்கள் என்பவை அக்னி, சூரியன் மற்றும் சந்திர மண்டலம் என்பவை.  அவை உடலில் முறையே மூலாதாரம், சுவாதிஷ்டானம் மணிபூரகம்- தீ மண்டலம், அனாகதம் விசுத்தி –சூரிய மண்டலம், ஆக்ஞை மற்றும் சகஸ்ராரம்-சந்திர மண்டலம் என்றும் விளங்குகின்றன. இவற்றைக் கடந்த துவாதசாந்தம் சிவன் இருக்கும் மண்டல பரம் அல்லது பரம் வெளி என்று அழைக்கப்படுகிறது. இதன் தியானம் அடுத்த பாடலில் கூறப்படுகிறது,  இங்கு மூன்று மண்டல தியானம் கூறப்படுகிறது.  

No comments:

Post a Comment