Verse 314
வாயான மேலவாசல் பூட்டும்போது
மகத்தான திக்குஎட்டும் ஒடுக்கமாச்சு
மாயாத ஒடுக்கமத்தில் ஒடுங்கியந்த
மகத்தான அனுக்கிரகம் வலஞ் சென்றேறி
தாயான சிரமதே போதமாகத்
தானிருக்க சஞ்சார சமாதி யாச்சே
தோயாத சஞ்சார சமாதிகொண்டு
சுகமாக ஆரூட சமாதிகாணே
Translation:
When the top door is locked
The eight directions became abiding
Abiding in that control
Circumambulating/going to the right of anugraham and
climbing
With mother in the head as bodham
Remaining so is sanchara Samadhi
Attaining the sanchara Samadhi
See the aarooda Samadhi with ease.
Commentary:
Agatthiyar elaborates sanchara Samadhi further. This indicates the importance of this Samadhi. He says that when all the principles are
contained within and the top door is locked, then the eight directions also
abide. Anugraha may be referring to Rahu
and Ketu. The order of planets in the
body is as follows: Saturn- muladhara, Jupiter
(guru)-svadishtana, mars (sevvaai- mangala)- manipuraka, Venus (sukra)-
anahatha, mercury (budha)- vishuddhi, surya and Chandra- ajna. Rahu and Ketu- sahasrara. Rahu and ketu are not real
planets. They are points where sun’s
path (imaginery) around earth and moon’s path around earth meet. They are called lunar nodes. In our body Chandra and surya correspond to
ida and pingala nadi. They two meeting
points in our body, the kanda moola and ajna.
Beyond ajna the nadis become very fine, Agatthiyar calls them hair-like
bridge. They reach the sahasrara.
So the yogin crosses all the planets including Rahu and
Ketu and reaches the top where Sakthi remains as bodham or awareness/chith. Reaching this stage is sanchara Samadhi.
Next Agatthiyar will describe aarooda Samadhi.
இப்பாடலிலும் சஞ்சார சமாதியை விளக்குகிறார் அகத்தியர். இது இந்த சமாதியின் முக்கியத்துவத்தைக்
காட்டுகிறது. எல்லா தத்துவங்களும்
ஒடுங்கிய பிறகு வாசி மேலை வாசலை அடையும்போது எட்டு திக்குகளும் ஒடுங்கும்
என்கிறார் அகத்தியர். அதன் பிறகு
அனுகிரகத்தை வலம் வந்து சிரசில் தாய் போதமாக இருக்கும் நிலையை அடைவதே சஞ்சார சமாதி
என்கிறார் அவர். அனுகிரகம் என்பது முக்கிய
கிரகங்களைவிட வேறான ராகு கேதுவைக் குறிக்கலாம்.
நம் உடலில் உள்ள சக்கரங்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு
கீழ்க்கண்டவாறு: சனி- மூலாதாரம், குரு-
சுவாதிஷ்டானம், செவ்வாய்- மணிபூரகம், சுக்கிரன்- அனாகதம், புதன்- விசுத்தி, சூரிய
சந்திரர்கள்- ஆக்ஞை, ராகு கேது- சகஸ்ராரம்.
ராகு கேதுக்கள் உண்மையில் கிரகங்கள் அல்ல.
அவை பூமியைச் சுற்றி சூரியனின் பாதையும் சந்திரனின் பாதையும் சந்திக்கும்
புள்ளிகள். நம் உடலில் சூரியனும் சந்திரனும் இடை பிங்கலை நாடிகளைக்
குறிக்கின்றன. அவை நமது உடலில் கண்ட மூலம்
எனப்படும் இடத்தில் சுழுமுனை நாடியுடன் மூன்றாகப் பிரிகின்றன. மீண்டும் ஆக்ஞையில் அவை சுழுமுனை நாடியைச்
சந்திக்கின்றன. அதன் பிறகு நுண்ணிய
நாடிகள், அகத்தியர் அவற்றை மயிர்ப்பாலங்கள் என்கிறார், சகஸ்ராரம் வரை செல்கின்றன.
No comments:
Post a Comment