Verse 301
காணப்பா குருவசனந் தெரிந்துகொண்டு
கலந்து நின்ற மாய்கை யொடு மாயாவின்பம்
பேணப்பா சைதன்னியம் இந்த மூன்றும்
பிலமான ஆபீசம் போலே பாரு
தோணப்பா மறைந்திருக்கக் கண்டாலுந்தான்
துகளருத்து தீர்க்கமுடன் முத்தியாக
பேணப்பா அறிவுடனே என்க்ஷேரந்தாள்
பிலமாக நிற்கிறதோர் திறந்தான் பாரே
Translation:
See son, knowing the words of the guru
The pleasure due to maya, maya that is mixed with everything and
The chaitanyam- these three
See them as the locus, the aabhejam.
Even if you see them hidden
Cut them away firmly,
Nuture mukthi with awareness. In my locus
Remaining firmly is an accomplishment. See it.
Commentary:
Agatthiyar says that one has see maya, the pleasure it brings and chaitanyam as manifestations of aa bhijam. Aabhijam or aakaram refers to Sakthi. The short vowels are considered as Siva while the long vowels are considered as Sakthi. Thus akaara is Siva while aakara is Sakthi. Sakthi is Siva’s power of manifestion. The effect of that is maya and its expressions- the pleasures and the Jiva. Thus, when one looks at them as expressions of Lord’s power then their true nature is revealed and only gets out of delusion. Agatthiyar says that one should cut them away even if they remain hidden. It is not easy to spot maya and its functioning. If the effect of maya are cut away then one attains the state of mukhti. The term “enksheranthaal” is not clear.
தாரணையின்போது என்ன செய்ய வேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். மாயை, அது கொண்டுவரும் இன்பங்கள், சைத்தன்யம் என்ப்படும் ஆத்மா ஆகியவை ஆ பீஜம் என்று பார்க்கவேண்டும் என்கிறார் அவர். உயிரெழுத்துக்களில் குறில்கள் சிவன் என்றும் நெடில்கள் சக்தி என்றும் கருதப்படுகின்றன. அகாரம் என்பது சிவன் என்றால் ஆகாரம் என்பது சக்தி. ஆபீஜம் என்றால் சக்தி விதை, அதாவது சக்தியினால் ஏற்பட்டவை என்று பொருள். அதனால் மேற்கூறிய மூன்றும் சக்தியின் விதையிலிருந்து தோன்றியவை என்பதை ஒருவர் புரிந்துகொண்டால் அவற்றின் உண்மையான தன்மை அவருக்குப் புலப்படுகிறது. இந்த நிலை மாயையின் தாக்கத்தை நிறுத்தி அவரை முக்தி நிலைக்கு அழைத்துச் செல்கிறது. மாயையையும் அதன் செயல்பாட்டையும் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் அவை மறைந்திருந்தாலும் ஒருவர் அவற்றைக் கண்டறிந்து அறுக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். “என்க்ஷேரம்” என்றால் என்ன என்று புரியவில்லை.
No comments:
Post a Comment