Wednesday 17 February 2016

310. Tattva laya samadhi

Verse 310
சமாதிவிபரம்
செய்யப்பா தியானமது பத்துஞ் சொன்னேன்
சிவசிவா சமாதியஞ் சுஞ் செப்பக் கேளே
மெய்யப்பா தத்துவலய சமாதியப்பா
விளங்கி நின்ற பத்துமதை நன்றாய்ப் பார்த்து
பொய்யப்பா வென்றறிந்து புருவமேவி
பூரணமாய் கற்பூர தீபம் பார்த்து
மெய்யப்பா மய்யத்தில் நின்றாயானால்
மகத்தான தத்துவ லய சமாதியாச்சே

Translation:
Details about Samadhi
See son, I told you about ten types of dhyana
Siva sivaa!  Listen to me talk about five types of Samadhi
The body/truth tattva laya Samadhi
Seeing the ten well
Knowing that they are fallacy, going to the brows
Seeing the camphor light
If you remain in the middle
It is the great tattva laya Samadhi.

Commentary:
In the previous section on dhyana Agatthiyar described ten types of dhyana.  They are contemplation of everything as bodham, the five deities, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva,  the three mandala- agni, surya and Chandra, the dvadasantha or atthoyudam. 
Next he is talking about five types of samadhi and begins with tattva laya Samadhi.  It is seeing the ten principles as fallacy, focusing at the eyebrows and seeing the camphor light, the atma jyothi.  It is smoky like camphor light.

Konkanar, in his vaadha kaaviyam describes six types of Samadhi.  He also begins with tattva laya Samadhi and describes it in a greater detail.  He says that tattva laya Samadhi is merging all the thirty six tattva or principles that constitute the gross body, bhoudhika sareera, into sukshma sareera or subtle body.  This body is then merged into causal body or kaarana sareera which is finally merged with prakriti.  These principles represent the atma tattva.  He also says that the purusha, the composite of the vidya tattva should also be seen as consciousness or chaitanyam.  All the distinctions are removed and everything is seens in the singular state.   Thus the yogin reaches the state of pure consciousness or chaitanyam.  These principles stop pulling the yogi towards states of distinctions.  This is experienced at the ajna.  He calls this place as the room without air as breath remains in kumbaka here. 

முந்தைய பாடல்களில் அகத்தியர் பத்து வகை தியானங்களை விளக்கினார்.  அவை, அனைத்தையும் போதமாகப் பார்ப்பது, ஐந்து தெய்வங்களை, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன், ஆகியவர்களைத் தியானிப்பது, மூன்று மண்டலங்களை- அக்னி, சூரியன், சந்திரன், மற்றும் அத்தோயுதம் அல்லது துவாதசாந்தம் என்பவை.
அடுத்து, அவர் ஐந்து வகை சமாதிகளை விளக்குகிறார். முதலில் தத்துவ லய சமாதி விளக்கப்படுகிறது.  அது, பத்துவகைத் தத்துவங்களை பொய் என்று உணர்ந்து புருவமத்தியை அடைந்து. கற்பூர தீபம் போன்ற ஆத்ம சோதியைத் தரிசிப்பது தத்துவ லய சமாதியாகும்.

கொங்கணர் தனது வாத காவியத்தில் ஆறு வித சமாதிகள் உள்ளன என்று கூறிவிட்டு தத்துவ லய சமாதியை விளக்குகிறார். உடலாகப் பரிமளிக்கும் முப்பத்தாறு தத்துவங்களை சூட்சும சரீரத்தில் கரைத்து, சூட்சும சரீரத்தைக் காரண சரீரத்தில் கரைக்க வேண்டும்.  இந்த தத்துவங்கள் ஆத்மதத்துவங்கள் எனப்படுகின்றன.  அதன் பிறகு வித்தியா தத்துவங்கள் ஏற்படுத்தும் புருஷன் என்ற நிலையை சைதன்யமாகப் பார்க்க வேண்டும்.  இவ்வாறு வேறுபாடுகளற்ற நிலையை அடையவேண்டும்.  இந்த நிலையில் ஒருமை நிலை தரிசிக்கப்படுகிறது.  இது காற்றசையா அறை எனப்படும் ஆக்ஞையில் தரிசிக்கப்படுகிறது.  இவ்வாறு ஒருவரை வெளிப்பாடுகள் கொண்ட உலகுக்கு இழுக்கும் தத்துவங்களின் கட்டுப்பாடு தகர்க்கப்படுகிறது. இதுவே தத்துவ லய சமாதியாகும் என்கிறார் அவர்.

http://www.siththarkal.com/2011/03/blog-post.html

No comments:

Post a Comment