Sunday, 7 February 2016

296. Prana pratyahara procedure

Verse 296
காணவே அடிநாக்குக் கண்டம் நெஞ்சு
கருவான உதிரமொடு நரம்பு நாபி
தோணவே துடை முழங்கால் பாதங் கேளு
தொகுத்து நின்ற அங்குஷ்டங் களிலே மக்காள்
பூணவே பிராணனைத்தான் தானம்விட்டு
புத்தியுடன் அழைக்கிறது தலைகீழாகும்
பேணவே பிராண னென்ற பிரத்தியாகாரம்
பிரதான மான நிலை பேசுவேனே

Translation:
Uvula, throat, chest
Along with blood, nerves and navel
Thighs, calf and foot, listen
In the fingers and toes, people
Sending the prana there
And calling it back with buddhi is reversal
This is prathyaharam with prana
The important state, I will talk about it.

Commentary:
A common Tamil expression is “thalai keezh aagudhal” that head becoming foot or reversal/upside down.  Agatthiyar explains this term here.  Prana generally revolves in the skull. If it is directed towards the toward part of the body namely uvula, throat, chest, blood flow, nerves, navel, thighs, calves and toes it is called “thalai keezh aagudhal”. All the organs are activated by prana and under its control.  The senses are thus brought under prana’s control.  This is the prana prathyahara, the important state.


பிராணனைக் கொண்டு புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று அகத்தியர் முந்தைய பாடலில் கூறினார்.  அதை எவ்வாறு செய்வது என்று இப்பாடலில் விளக்குகிறார். சித்தர்கள் பரிபாஷையில் “தலைகீழ் ஆகுதல்” என்று ஒரு தொடர் பல இடங்களில் காணப்படுகிறது. அது என்ன என்று இப்பாடல் விளக்குகிறது.  பிராணன் பொதுவாக கபாலத்தில் சுழலும்.  அதைக் கீழ் நோக்கி, உள்நாக்கு, தொண்டை, இதயம், ரத்தம், நரம்புகள், நாபி, தொடை, முழங்கால் மற்றும் விரல்கள் ஆகியவற்றை நோக்கிச் செலுத்தி அதை மீண்டும் புத்தியால் அழைப்பதே பிராணன் பிராத்யாகாரம் என்னும்  பிரதான நிலை என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு புலன்களின் செயல்கள் பிராணனின் கட்டுக்குள் வருகின்றன.  அதுவே பிராணன் என்ற பிரத்தியாகாரம் எனப்படும் பிரதான நிலை என்கிறார் அகத்தியர்.  

No comments:

Post a Comment