Verse 319
ஒண்ணான நிச்சயத்தை உரைக்கவென்றால்
உண்ணாக்கும் அண்ணாக்கும் ஒன்றுங் காணேன்
கண்ணான பேரொளியை என்ன சொல்வேன்
கறுப்பல்ல வெளுப்பல்ல சிகப்புமல்ல
விண்ணான நீலமல்ல பச்சையல்ல
விளம்புதற்கு அரிதான அண்டத்துள்ளே
பண்ணான பாழ்வீட்டு ஈராருக்குள்ளே
பாய்ந்து தன்னை பார்க்க எல்லா மிருளாய்ப் போச்சே
Translation:
The singular definitude- if should be described
The uvula and the region above became one
The great effulgence, the eye, how can I describe it?
It is not black, white or red
It is not the sky blue, green
Within the difficult-to-describe universe
Within the house of “paazh” twelve
Rushing within and if seen, everything will become dark.
Commentary:
Agatthiyar begins this verse saying that he will try to
describe something which is indescribable and goes ahead to say that in the
supreme state the “unnaakku annaakku” will become one. In the physical world these words correspond
to the uvula and the region in the skull above it. Philosophically it means akara and ukara, the
nirguna and saguna brahman become one.
It is the supreme effulgence, supreme consciousness, prakasha, which
cannot be described in words. He says
that it is not black, white of red.
These colors correspond to various principles, They represent ida,
sushumna and pingala nadi, tamas-satva-rajas, apara-para and parapara state of
Sakthi etc. Thus Agatthiyar indicates
that this state is beyond any distinction.
Paazh is generally explained as complete destruction. Here it means destruction of all
distinctions. Tamil Siddhas use this
term to represent a zone between principles.
For example there is a paazh where atma tattva end and vidya tattva
exist. Thus it represents a zone which
cannot be described. The paazh refered
to here corresponds to the zone beyond the dvadasantha where all distinctions
terminate, the place where there is supreme existence. Agatthiyar says that beyond the dvadasantha
it is darkness.
வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்றை இப்போது
விளக்கப்போகிறேன் என்று கூறி இப்பாடலைத் தொடங்கும் அகத்தியர் சமாதியின் உச்ச
நிலையில் அண்ணாக்கும் உண்ணாக்கும் ஒன்றாகும் என்கிறார். பொதுவாக இந்தச் சொல் சிறு நாக்கையும் அதற்கு
மேல் இருக்கும் இடத்தையும் குறிக்கும்.
இந்த வார்த்தைகளைக் கூர்ந்து பார்த்தோமானால் அது அகாரமும் உகாரமும்
ஒன்றாகும் என்பதாகவும் தோன்றுகிறது.
அகாரம் நிர்குணப் பிரம்மனையும் உகாரம் சகுணப் பிரம்மனையும்
குறிக்கின்றன. இவ்வாறு உச்ச நிலை என்பது
சகுணப் பிரம்மனும் நிற்குணப் பிரம்மனும் ஒன்றாகும் நிலையைக் குறிக்கிறது. இந்த நிலை பேரொளி நிலை என்றும் அது கருப்பு,
சிவப்பு, வெளுப்பு அல்ல என்றும் அவர் கூறுகிறார்.
பேரொளி என்பது பரவுணர்வு. மேலே
கூறிய நிறங்கள் பல தத்துவங்களைக் குறிக்கின்றன.
அவை முறையே இடை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடி, தமஸ், ரஜஸ் மற்றும் சத்துவ
குணங்கள், அபரா பராபரா மற்றும் பரா சக்தி நிலைகளைக் குறிக்கின்றன. இவ்வாறு அது நிறமற்றது என்று குறிப்பிடுவது அது
வித்தியாசங்களற்ற ஒருமை நிலை என்பதை விளக்குகிறது. இது பண்ணிரண்டைக் கடந்த பாழ் என்றும் அங்கு இருப்பது
இருள் என்றும் அகத்தியார் கூறுகிறார்.
பாழ் என்பது பொதுவாக சர்வ நாசம் என்பதைக் குறித்தாலும் இங்கு நாசம் அடைவது
பாகுபாடுகளே. பாழ் என்ற சொல்லை விளக்க
முடியாத ஒரு நிலையைக் குறிக்க சித்தர்கள் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ஆத்மதத்துவங்களுக்கும் வித்யா
தத்துவங்களுக்கும் இடையே ஒரு பாழ் உள்ளது.
இங்கு குறிப்பிடப்படும் பாழ் துவாதசாந்தத்தைக் கடந்த நிலை. ஒருமை நிலை. அது இருள் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment