Thursday, 4 February 2016

294. Prathyahara-2

Verse 294

சொல்லக் கேள் சரீரமென்று பிரத்தியாகாரஞ்
சுகமாகச் சமாதியிலே இருத்தலொன்று
விள்ளக்கேள் அறிவென்ற சிவமதொன்று
விபரமுடன் கண்டுணர்ந்த மேன்மையாகி
அல்லக்கேள் நாடிசுத்தியான பின்பு
அப்பனே இளமையெல்லாம் காப்பதென்றுஞ்
சொல்லக்கேள் ரெண்டு விதங் கண்டு கொள்ளு
சிவசிவா இந்திரியச் செயல்தான் பாரே

Translation:
Listen to me say this, the prathyahara involves the body
One type is staying in Samadhi with pleasure
Listen to me explain it, the mind to remain in sivam in another
Knowing these in detail
After the nadis have been purified
Son, saving the youthfulness
These are the two types. Know them
Sivasivaa, see the action of the indriyas

Commentary:
Agatthiyar listed the six types of pratyahara as follows:
sareera pratyahara, indriya pratyahara, prana pratyahara, karana pratyahara, kaamya pratyahara and sarvasanga pratyahara.

Sareera pratyahara is having the body remain in samadhi with awareness in sivam.  Controlling the senses thus protecting youth is indriya pratyahara.

ஆறு வகைப் பிரத்தியாகாரங்களை அகத்தியர் முந்தைய பாடல்களில் கூறியுள்ளார்  அவை சரீர பிரத்தியாகாரம், இந்திரியப் பிரத்தியாகாரம், பிராண பிரதியாகாரம், கரண பிரத்தியாகாரம், காமியப் பிரத்தியாகாரம் மற்றும் சர்வசங்க பிரத்தியாகாரம் என்பவையாகும்.

சரீர பிரத்தியாகாரம் என்பது உடலை சமாதி நிலையில் வைப்பது மனத்தை சிவத்தில் வைப்பது இந்திரியப் பிரத்தியாகாரம்.  இது ஒருவரை இளமையாக இருக்க வைக்கும் என்கிறார் அகத்தியர். 


No comments:

Post a Comment