Verse 307
சதாசிவத்தியானம்
காணவே சதாசிவனார் தியானங்கேளு
கருணையுடன் பஞ்ச வர்ண ரூபமாக
தோணவே மனோன்மணியும் வாமபாகம்
சுகமாக தேவ கணஞ் சூழ்ந்து நிற்க
பேணவே இருதயமாங் கமலந் தன்னில்
பிரியமுடன் தானினைந்து தியானித்தாக்கால்
பூணவே நினைத்த வண்ணங் கண்ணிற்காணும்
புனிதமுள்ள தியானமதை பூண்டுபாரே
Translation:
Sadasiva dhyana
Hear about Sadasiva dhyana
As five hued form
With Manonmani on the left
Being surrounded by deva gana
To nurture in the lotus of the heart
If contemplated with love
It will be seen as thought
See the pure contemplation.
Commentary:
Sadasiva is the lord of the vishuddhi cakra. Some yoga works say that he is experienced at the ajna cakra. He is five hued, indicating that he is a composite of the five elements each with its own color. Agatthiyar tells Pulathiyar to contemplate on him in the five-colored form, with Manonmani, his consort on his left, surrounded by entourage of Devas or celestials. One has to contemplate with love as this is the emotion at the pinnacle of yoga. One is reminded of Tirumular’s expression Love is Sivam. If one performs dhyana as mentioned above one will see Sadasiva as one imagined. This fits with the idea that one experiences God as one has imagined, as one’s ishta devata.
சதாசிவன் விசுத்தி சக்கரத்தின் அதிபதி. சில யோக நூல்கள் அவரை ஆக்ஞையில் காணலாம் என்று கூறுகின்றனர். இவரது நிறம் பஞ்ச வர்ணம். ஏனெனில் இவர் பிரம்மாவிலிருந்து மேலே உள்ள ஐந்து தத்துவங்களின் கூட்டு, ஐந்து பூதங்களைக் குறிப்பவர். அதனால் அவர் ஐம்பூதங்களின் நிறங்களான பஞ்ச வர்ணமாகக் காட்சியளிக்கிறார். இவரது தியானத்திற்கு அவரது துணைவியார் மனோன்மணியை இடது பாகத்திலும் அவரைச் சுற்றி தேவ கணங்கள் சூழ்ந்திருப்பதாகவும் அன்புடன் நினைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். யோகத்தின் உச்ச நிலையில் ஏற்படுவது அன்பு. இதைத்தான் திருமூலர் அன்பே சிவம் என்கிறார். இவ்வாறு தியானித்தால் ஒருவர் எவ்வாறு எண்ணுகிறாரோ அவ்வாறு சதாசிவனைக் காண்கிறார் என்கிறார் அகத்தியர். இதைத்தான் இஷ்ட தெய்வத்தின் தரிசனம் என்கின்றனர்.
No comments:
Post a Comment